கம்பராமாயணம் 2854 · ஆரணிய 5.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வுரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் - சூர்ப்பணகை சொன்ன அச்சொற்களை அறிந்த இராமன் சந்தேகம் கொண்ட மனமுடையவனாகி; செய்கை செவ்விது அன்று - இவள் செயல் களங்கமற்றது அன்று; சிறிதின் அறிதல் ஆகும் என்று உணர - சிறிது கேட்டுத் தெரிவது தகுதி என எண்ணி; செங்கண் வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் - சிவந்த கண்களையும் கொடிய வடிவையும் கொண்ட இராவணனின் தங்கை என்பது உண்மையானால்; இவ் உரு இயைந்த தன்மை இயல்பின் இயம்புதி என்றான் - இந்த அழகிய வடிவு பொருந்திய விதத்தை எனக்கு உள்ளபடி கூறுவாய் என்று சொன்னான்.
செய்கை - உடம்பு என்பாருமுளர்; தொழிலாகு பெயர். செவ்விதன்று - மாயையால் அமைந்தது போலும். செங்கண் மிகுந்த சினத்தைக் குறிக்கும். சிறிதின் அறிதல் ஆகும் என்பது சிறிய பொழுதில் அறியலாம் என்பாருமுளர். சூர்ப்பணகையின் அழகிய தோற்றத்திற்கும் இராவணனின் தங்கை என்று அவள் கூறிய சொல்லுக்கும் இயைபின்மையால் ஐயுற்றான். இராமனின் கேள்விகளும் சூர்ப்பணகையின் விடையும் கம்ப நாடகத்தில் சுவைமிக்க பகுதியாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing those words, the hero, his mind full of doubt, thought,
- "Her conduct is not straight; I can learn the truth by asking a little," and said,
- "If it is true that you are the sister of the red-eyed one of cruel form,
- tell me truly how you came to have this form."
What the poem says
Irāmaṉ becomes suspicious. A woman this lovely does not fit with being sister to the fierce, red-eyed Irāvaṇaṉ. Rather than accuse her, he asks her calmly to explain how she came by such a form.
This exchange of questions and answers between Irāmaṉ and Cūrppaṇakai is one of the most enjoyable dramatic passages in the epic.