கம்பராமாயணம் 2856 · ஆரணிய 5.42

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தையல் - பெண்ணே!; இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் - தேவர்களின் தலைவனாம் இந்திரன் கூட இழிந்த நிலையில் ஏவிய சிறு தொழிலையும் செய்யும்படியுள்ள; அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் - மூன்று உலகங்களையும் ஆட்சியில் அடக்கி ஆள்பவனாம் இராவணனின் தங்கை ஆனால்; சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை - மிக்க செல்வச் சிறப்பின் பெருமிதத்தோடு நீ காணப்படவில்லை; துணையும் இன்றி - தோழியர் காவலர் முதலியவர் இல்லாமல்; தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் என்றான் - தனியளாக இவ்வாறு வருவதற்கு உரிய காரணம் என்ன என்று கேட்டான்.

தையல் - அலங்கரித்த பெண் எனலுமாம், அழகுடையவள் என்றுமாம், (கலி. 27.19). எளிமையின் ஏவல் செய்தல் என்பது தன்னுயர் நிலை கருதாமல் ஏவிய பணிகளைச் சிறிதும் தடையில்லாமல் அச்சமுடன் அடக்கமாகச் செய்தல்.

மூவுலகும் ஆள்பவன் தங்கை என்று கூறியதற்கு இணங்கத் தோழிமார் முதலிய பல வகைச் சிறப்புடன் வருதலின்றித் தனியே ஏன் வந்தாய் எனக் கேட்கும் போது இராமனின் ஐயம் நன்கு வெளிப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If you are the sister of him who rules all three worlds so masterfully
  2. that even the lord of the gods humbly runs his errands,
  3. you do not appear with the weight of wealth; and without any companion,
  4. what reason is there for you to come alone, lady?" he asked.

What the poem says

Irāmaṉ presses his doubt further. If she is really the sister of Irāvaṇaṉ, at whose command even Indra, king of the gods, runs errands, why does she come without splendour, maids or guards?

The question shows that Irāmaṉ has not been taken in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'imaiyavar talaivaṉēyum eḷimaiyiṉ ēval ceyyum
amaitiyiṉ, ulakam mūṉṟum āḷpavaṉ taṅkai āyiṉ,
cumaiyuṟu celvattōṭum tōṉṟalai; tuṇaiyum iṉṟi
tamiyai nī varutaṟku otta taṉmai eṉ? taiyal!' eṉṟāṉ.