கம்பராமாயணம் 2857 · ஆரணிய 5.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரன் அஃது உரைத்தலோடும் - வீரனாம் இராமன் அவ்வார்த்தையைச் சொன்னவுடன்; மெய் இலாள் - உண்மையில்லாதவளாம் சூர்ப்பணகை; (இராமனைப் பார்த்து) விமல யான் அச்சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலென் - குற்றமற்றவனே! நான் அந்த நற்பண்பும் நற்செய்கையுமில்லாத அரக்கர்களிடத்து சேர்வேன் அல்லேன்; தேவர் பாலும் ஆரிய முனிவர் பாலும் அடைந்தனென் - தேவர்கள் இடத்தும் சிறந்தவராம் முனிவர்களிடத்தும் சேர்ந்துள்ளேன்; இறைவ ஈண்டு ஓர் காரியம் உண்மை நின்னைக் காணிய வந்தேன் என்றாள் - தலைவனே! இங்கு ஒரு செயல் எனக்கு ஆக வேண்டி இருப்பதால் உன்னைக் காண வந்தேன் என்று சொன்னாள்.
'மெய் இலாள்' என்பதற்கேற்பச் 'சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலேன்' என்றும் தேவர் பாலும் ஆரிய முனிவர் பாலும் அடைந்தனென் என்றாள். 'விமல' என்பதற்கேற்பவும் அவன் மனம் கொள்ளுமாறும் அரக்கரைச் 'சீரியரல்லார்' எனக் கூறினாள். தலைவனைக் காண வருவது அவனுக்குட்பட்டவர் செயலாம். எனவே சூர்ப்பணகை இராவணனைத் தன் தலைவனாக ஏற்காமல் இராமனைத் தன் தலைவனாக ஏற்றுக் கொண்டாள் என்பதை இதனால் உணருமாறு செய்கிறாள். முனிவரிடம் சேர்ந்ததால் எவ்வித ஆடம்பரமின்றி வந்ததையும், 'தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்' என இராமன் முன்னர்க் கேட்டதற்கு (2773) உரிய விடையாகவும் இவ்வாறு உரைக்கின்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the hero said this, she who had no truth in her answered: "Spotless one! I
- do not keep company with those who are not noble; I have gone to the gods
- and to the noble sages for refuge. My lord, there is truly
- a task I need done, and I have come to see you for it."
What the poem says
Cūrppaṇakai, whom the poet calls the woman without truth, now explains why she has come alone. She says she does not mix with the ignoble demons but lives among gods and sages, which is why she has no royal retinue.
She calls Irāmaṉ "spotless one" and "my lord", flattering him and hinting that she takes him, not Irāvaṇaṉ, as her master. She says she has come to him because of something she needs.