கம்பராமாயணம் 2861 · ஆரணிய 5.47

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் - (அவ்வாறு எண்ணி மேலும்) பேசாதிருந்த இராமனின் மனத்தின் தன்மையை உணராதவளான; பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம்மகள் - மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையுடைய பொய்யுருக் கொண்ட சூர்ப்பணகை; புகன்ற என்கண் ஆசை கண்டு அருளிற்று உண்டோ - இவன் என்னிடத்தில் கூறிய சொற்கள் ஆசை உண்டாகி அருள் புரிந்தது ஆகுமோ?; அன்று எனல் உண்டோ - நீ விரும்புவது தக்கது அன்று எனக் கூறுவதாகுமோ?; என்னும் ஊசலின் உலாவுகின்றாள் - என்று இரு வேறுபட்ட எண்ணங்களிடையே ஊஞ்சலைப் போல் முன்னும் பின்னும் தடுமாறும் கருத்துடையவளானாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் - மீண்டும் ஒரு சொல்லைக் கூறுவாள் ஆனாள்.

பெற்றி - பெருமையும் ஆம். பூசல் - ரீங்கார ஒலி எனவும் ஆம். பொய்ம்மகள் - பொய் பேசும் பெண் எனவும் உரைப்பர். கண்டு - உண்டாக, 'முனைவன் கண்டது முதல் நூலாகும்' (தொல். சொல். மரபு. 94). ஆசை கொண்டானோ கொள்ளவில்லையோ எனத் தடுமாறும் கருத்து நிலையை 'ஊசலின் உலாவுகின்றாள்' என்பர். உரை - முதனிலைத் தொழிற் பெயர். ஊசல் தடுமாறும் கருத்தைக் குறிப்பதோர் இலக்கணை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not grasping the mind of the generous one who sat without speaking,
  2. the false woman, whose hair rang with the clamour of bees, swung
  3. to and fro as on a swing: "Has he looked with favour on the desire I spoke of?
  4. Or will he say no?" and she spoke yet again.

What the poem says

Irāmaṉ says nothing after hearing her confession. Cūrppaṇakai, called the false woman because of her assumed shape and her lies, cannot tell what his silence means.

Her mind swings back and forth like a swing between hope that he has accepted her and fear that he will refuse. So she starts talking again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēcalaṉ irunta vaḷḷal uḷḷattiṉ peṟṟi ōrāḷ,
pūcal vaṇṭu araṟṟum kūntal poym makaḷ,''pukaṉṟa eṉkaṇ
ācai kaṇṭaruḷiṟṟu uṇṭō? aṉṟu eṉal uṇṭō? '' eṉṉum
ūcaliṉ ulāvukiṉṟāḷ, mīṭṭum ōr uraiyaic colvāḷ.