கம்பராமாயணம் 2862 · ஆரணிய 5.48

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுத அரு மேனியாய்! - ஓவியத்தில் தீட்டுதற்கு அரிதான வடிவழகுடையவனே!; ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் - (நீ) இங்கு வந்து சேர்ந்ததை அறியாதவளாம் நான்; முழுதுணர் முனிவர் ஏவல் செய்தொழில் முறையின் முற்றி - எல்லாம் அறிந்த முனிவர்களின் ஏவலை ஏற்றுச் செய்யும் தொழிலை முறையாக முடித்துக் கொண்டிருந்ததால்; பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக - குற்றமற்ற (என்) பெண் தன்மையோடும் இளம் பருவமும் பயன்படாமல் போக, பொழுதொடு நாளும் வாளா கழிந்தன என்றாள் - ஒவ்வொரு நாளும் அதன் சிறுபொழுதும் வீணாகப் போயின என்று கூறினாள்; போலும் - அசைச்சொல்.

இராமன் எழுதரு மேனியன் என்பதை 'இவ் எழுத அரிய திருமேனிக் கருங்கடலைச் செங்கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்' (656) என்ற விசுவாமித்திரர் கூற்றாலும் 'ஓவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய்' (4020) எனும் வாலி கூற்றாலும் அறியலாம். முன்னர் 'அறந்தலை நிற்பதானேன்' (2772) என்று சூர்ப்பணகை கூறிய மொழிகள் பொய் என்பதை 'அங்கு இராமன் எய்தியது அறியாததால் பொழுதொடு நாளும் வாளா கழிந்தன' என்கிறாள். இராமனைக் கூடினால் தன் பெண்மையும் இளமையும் பயன்படும் என்று தன் காம உணர்வை வெளிப்படுத்தினாள். சிறு பொழுது என்பவை காலை, நண்பகல், எற்பாடு, மாலை, இடையாமம், வைகறை ஆகும். போலும் என்பதை வினாப் பொருளில் வந்த இடைச்சொல் என்பாருமுளர். முற்றி என்பது முற்ற என்ற எச்சத் திரிபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You whose form no painter could capture! Not knowing that you had come here,
  2. I was busy fulfilling in due order the tasks set by the all-knowing sages,
  3. and so my flawless womanhood and my youth have gone to waste,
  4. and the hours and the days have passed in vain, it seems," she said.

What the poem says

Cūrppaṇakai flatters Irāmaṉ as a beauty no artist could paint, a praise that Vicuvāmittiraṉ and Vālī also give him elsewhere in the epic. She says she spent her days serving the sages and did not know he had come to the forest. So, she complains, her youth has been going to waste.

The complaint gives her away. She has just claimed to be devoted to dharma, yet she treats every hour spent without Irāmaṉ as an hour lost.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eḻuta aru mēṉiyāy! īṇṭu eytiyatu aṟintilātēṉ,
muḻutu uṇar muṉivar ēval cey toḻil muṟaiyiṉ muṟṟi
paḻutu aṟu peṇmaiyōṭum iḷamaiyum payaṉiṉṟu ēka
poḻutoṭu nāḷum vāḷā kaḻintaṉa pōlum 'eṉṟāḷ.