கம்பராமாயணம் 2889 · ஆரணிய 5.75

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அலைக்கும் ஆழி அடங்கிட , அங்கையான்
மலைக் குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் ,
நிலைக்கும் வானில் நெடுமதி நீள் நிலா
மலைக்க , நீங்கும் மிடுக்கினள் மாந்துவாள் .

பொருள் · Meaning in Tamil

அலைக்கும் ஆழி அடங்கிட - தன்னை வருத்தும் கடல் ஓசையின்றி அடங்கிப்போக, அங்கையால் மலைக் குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் - தன் உள்ளங்கையால் மலைக் கூட்டங்களைக் கொண்டு வற்றச் செய்யும் எண்ணம் கொண்டவளானாள்; (ஆனால்) வானில் நிலைக்கும் நெடுமதி - ஆகாயத்தில் விளங்கும் முழுமதி; நீள் நிலா மலைக்க - நீண்டு பரவிய நிலவொளி எதிர்த்து அழித்தலால்; நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் - தப்பும் வலிமை குறைந்தவளாய் மனம் வருந்துவாள்.

அலைக்கும் ஆழி - அலை வீசும் கடலுமாம். அலை ஓசை காமுற்றவரைத் தூங்க விடாமல் வருத்தும். அதனால் கடல் நீரைத் தூர்க்கவும் மலைகளைத் தன் உள்ளங்கையால் எடுத்துப் போட்டு அடக்கவும் எண்ணினாள். நிலாவோ கடலில் தோன்றிய உறவுமுறை உடையது. எனவே தன் தாயாம் கடலைச் சூர்ப்பணகை தூர்க்காமல் காக்கத் தன் நிலவால் அவளுடன் மலைத்தது. தாயைக் காக்க மகன் போர் புரியும் செயல் இங்கு நினைத்தற்குரியது.

'நீள் நிலா வலைக்கு நீங்கும்' என்ற பாடம் ஓதி அதற்கு நீண்டு பரவியுள்ள நிலாவாகிய வலையிலிருந்து தப்பிச் செல்லும் எனப் பொருள் காண்பர். இப்பாடலில் முன்னர்த் தப்பிய முழுமதி (2805) கடலைத் தூர்க்கச் சூர்ப்பணகையின் செயலைத் தடுத்தது என்பது எண்ணுதற்குரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To still the tormenting sea, she meant to fill it
  2. with whole ranges of mountains thrown with her palms;
  3. but the long light of the great moon fixed in the sky
  4. fought against her, and with no strength to escape, she was undone.

What the poem says

The roar of the sea keeps lovers awake, so Cūrppaṇakai decides to fill the ocean with mountains. But the moon, born from the sea in the churning of the ocean, defends its mother and attacks her with its light. She has no strength left to resist.

An alternative reading pictures the moonlight as a net from which she cannot escape.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alaikkum āḻi aṭaṅkiṭa, aṅ kaiyāl
malaik kulaṅkaḷiṉ tūrkkum maṉattiṉāḷ,
nilaikkum vāṉil neṭu mati nīḷ nilā
malaikka, nīṅkum miṭukku ilaḷ māntuvāḷ.