கம்பராமாயணம் 2892 · ஆரணிய 5.78

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன் கதிர் இளம் கொங்கை மேல் - (சூர்ப்பணகை தன் காமத் தீயைத் தணிப்பதற்காக) தனது ஒளி மிக்க இளமையான முலைகள் மீது; கைகளால் ஐய தண்பனி அள்ளினள் அப்பினாள் - தன்னிரு கரங்களால் மிக நுட்பமான குளிர்ந்த பனிக் கட்டிகளை அள்ளி எடுத்து அப்பிக்கொண்டாள்; (ஆனால்) மொய்கொள் தீயிடை வெந்து - வலிமையால் பற்றிப் பரவிய காமமாம் தீயிடத்தே வெந்து; முருங்கிய வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்கும் - காய்ந்த சூடான பாறை மேல் இட்ட வெண்ணெய் போன்று உருகி அழிந்தது. ஆல் - அசை.

தீயானது சூர்ப்பணகை கொண்ட காமத்திற்கும், வெய்ய பாறை அவளுடைய முலைகளுக்கும், பனியானது வெண்ணெய்க்கும் உவமையாயின. பனி என்பதைப் பனிக் கட்டியாகக் கொள்ளலாம். ஐய என்பதற்கு மென்மையான எனவும் பொருள் கூறுவர். வெய்ய பாறையில் வெண்ணெய் உருகியது போலப் பனிக்கட்டியும் சூர்ப்பணகையின் தனங்களின் காம வெப்பத்தால் உருகியொழிந்தது. இவ்வுவமையின் அழகைக் குறுந்தொகையில் (58) 'ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்... வெண்ணெய் உணங்கல் போல' என்ற உவமையுடன் ஒப்பிட்டு இன்புறலாம். பனிக்கட்டியை அப்பிக் காம வெப்பிலிருந்து தப்ப நினைத்தும் அது பலிக்கவில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With her hands, on her bright young breasts
  2. she scooped up fine cold snow and plastered it;
  3. but it was like butter on a scorching rock
  4. burnt in a blazing fire, and it melted away.

What the poem says

Cūrppaṇakai tries to cool her burning breasts with handfuls of snow, but her lust is so hot that the snow melts at once, like butter put on a sun-baked rock.

The commentary links the image to a Kuṟuntokai poem in which butter melts on a hot boulder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaikaḷāl, taṉ katir iḷaṅ koṅkai mēl
aiya taṇ paṉi aḷḷiṉaḷ appiṉāḷ;
moy koḷ tīyiṭai ventu muruṅkiya
veyya pāṟaiyil veṇṇey nikarkkumāl.