கம்பராமாயணம் 2896 · ஆரணிய 5.82

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன காலை அழல் மிகுத்து ஏறலும்
முன்னின் மும்மடியாய் முலை வெந்து உக ,
இன்னவா செய்வது என்று அறியாது இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ .

பொருள் · Meaning in Tamil

அன்ன காலை அழல் மிகு தென்றலும் - அச்சமயத்தில் வெப்பம் மிக்க தென்றல் காற்றும், முன்னின் மும்மடி ஆய் - முன்பு வருத்தியதைவிட மூன்று மடங்கு மிகுதியாய் (வருத்த); முலை வெந்து உக - கொங்கைகள் வெப்பமுற்று அனல் சொரிய; இன்னவா செய்வது என்று அறியாது - இன்ன வகையாகச் செய்வேன் என்று தெரியாமல்; இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள் - இளமையும் பொன்போன்ற நிறமும் கொண்ட தளிர்களின் மீது விழுந்து புரண்டாள்; அரோ - அசை.

இளம் பொன்னின் வார் தளிரில் புரண்டாள் என்பது காமத் தீயில் வருந்தும் பெண்களைத் தளிர்ப்படுக்கையில் கிடத்தி ஆற்றுவிக்கும் நிலையைக் காட்டும். தோழிகள் தளிரைப் பரப்பித் தலைவி துயரைத் தணிப்பர். இதனை மிதிலைக் காட்சிப் படலத்தில் சீதை பட்ட துன்பத்தைக் கூறும்போது 'கரிந்தன பல்லவங்களே' (529) என்பர். மேலும் 'தாயரின் பரி சேடியர் தாதுரு வீ அரித்தளிர் மெல்லணை மேனியில் காய் எரிக் கரியக் கரிய கொணர்ந்து ஆயிரத்தின் இரட்டி அடுக்கினர்' (560) என்பர். இங்குத் தாதியரோ பிறரோ உதவாமல் தனக்குத் தானே சூர்ப்பணகை தளிர்களைப் பரப்பி அவற்றில் புரண்டாள் என்பதாம். இவளுக்குத் தென்றலும் பகையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time the southern breeze, heavy with fire,
  2. grew three times fiercer than before, and her breasts burned and dripped heat;
  3. not knowing what to do,
  4. she rolled about on long young shoots golden as new gold.

What the poem says

Even the cave gives no relief. The southern breeze, which is supposed to be gentle, now burns three times hotter than before.

Not knowing what else to do, Cūrppaṇakai rolls on a bed of tender golden leaves, the traditional remedy for lovesickness. In Mithilā, Cītai's maids heaped such leaves around her and the leaves withered from her heat. Cūrppaṇakai has no friends to care for her and must make the bed herself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa kālai aḻal mikut teṉṟalum
muṉṉiṉ mum maṭi āy mulai ventu uka,
iṉṉavā ceyvatu eṉṟu aṟiyātu iḷam
poṉṉiṉ vār taḷiril puraṇṭāḷ arō.