கம்பராமாயணம் 2897 · ஆரணிய 5.83

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீரன் மேனி வெளிப்பட - (அப்போது) இராமனின் திருமேனியின் உரு வெளித்தோற்றம் எழ; வெய்யவள் கார்கொள் மேனியைக் கண்டனளாம் என - கொடிய அரக்கியாம் சூர்ப்பணகை கருமேகம்போன்ற அவனது திருமேனியைக் கண்டவளே போல; சோரும் - சோர்வு அடைவாள்; வெள்கும் - வெட்கமடைவாள்; துணுக்கெனும் - திடுக்கிட்டு நடுங்குவாள்; அவ்வுருப் பேருங்கால் வெம் பிணியிடைப் பேரும் - அந்த வடிவம் மறையும் போது கொடிய காம நோயில் மீண்டும் அகப்படுவாள்; ஆல் - அசை.

வெம்மை - கொடுமை. விருப்பம் எனக் கொண்டால் இராமன் மீது விருப்பம் கொண்டவள் என ஆம். காமத்தால் உருவெளித் தோற்றம் காண்பது காப்பியப் படைப்பின் இயல்பாம். மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமன் சீதையின் உருவெளிப் பாட்டைக் கண்டு வருந்தியதைப் பல பாடல்கள் விளக்கும் (619.630). பின்னர்ச் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் சீதையின் உருவெளிப்பாடு தோன்றியதால் இராவணன் வருந்திக் கூறிய கூற்றையும் விரித்துரைக்கும் (3210). கார் கொள் என்பதில் கொள் என்பது உவம வாசகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the hero's form appeared before her, the cruel one,
  2. as if she had truly seen that body dark as a cloud,
  3. would faint, be ashamed, and start in fright; and when that form
  4. faded away, she sank back into her cruel sickness.

What the poem says

Cūrppaṇakai begins to see visions of Irāmaṉ. When his dark form seems to rise before her, she swoons, feels ashamed, and starts in fright. When it fades, she falls back into her fever.

Such visions of an absent beloved are a convention of the epic. Irāmaṉ saw visions of Cītai in Mithilā, and later Irāvaṇaṉ too will be haunted by images of Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīraṉ mēṉi veḷippaṭa, veyyavaḷ,
kār koḷ mēṉiyaik kaṇṭaṉaḷām eṉa
cōrum; veḷkum; tuṇukkeṉum; av urup
pēruṅkāl, vem piṇiyiṭaip pērumāl.