கம்பராமாயணம் 2898 · ஆரணிய 5.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அஞ்சன மேகத்தை ஆகக் கொங்கையின் ஐயன் என்று தழுவும் - மை போன்று கரிய மேகத்தை இராமன் என எண்ணித் தன் மார்பிலுள்ள முலைகளில் பிடித்து அணைப்பாள்; அவை வெந்தன போகக் கண்டு புலம்பும் அப்புன்மையாள் - அம்மேகங்கள் (காமத் தீப்பட்ட உடலின் வெப்பத்தால்) வெந்து அழிந்தமை கண்டு வாய்விட்டுப் புலம்புவாள் அந்த இழிந்த பண்பு கொண்ட சூர்ப்பணகை, மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம் கொலோ - காமத்திற்கு ஒரு முடிவு உண்டாகுமோ? (ஆகாது).
கரிய மேகங்களைக் கண்டு இராமன் எனச் சூர்ப்பணகை எண்ணிக் கைகூப்பிய நிலையை முன்னர்க் கண்ட பாடல் கூறியது (2811). இப்போது அந்நிலையின் வளர்ச்சிப்படியாக மேகத்தைத் தழுவி நின்றாள். அதுவே காமத் தீயின் வெப்பத்தால் வெந்தொழிந்தது, மேகம் என்பது அழுதலும் பிதற்றலுமாகிய மன்மதாவத்தையாம். முன் மூன்றடிகளில் கூறிய சிறப்புப் பொருளை ஈற்றடியிலுள்ள பொதுப் பொருள் விளக்கி நிற்கும். இதனை வேற்றுப் பொருள் வைப்பணி என்பர். ஓர் ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking it for her lord, she clasps the kohl-dark cloud
- to her breasts and bosom; seeing it burn away and vanish,
- she wails; can there be any end
- to the passion of that base woman?
What the poem says
Earlier Cūrppaṇakai only folded her hands at the sight of dark clouds. Now she embraces them as if they were Irāmaṉ, and they burn up against her fevered body, leaving her wailing.
The poet ends by asking whether such infatuation can ever end. The final line draws a general truth from the particular case, a figure Tamil poetics calls vēṟṟup poruḷ vaippu.