கம்பராமாயணம் 2899 · ஆரணிய 5.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊழி வெங்கனல் உற்றனள் ஒத்தும் - காமத்தால் பிரளய காலத்தில் பரவும் கொடிய தீயில் பட்டவள் போலத் துன்புற்றாள் எனினும்; ஆழியானை அடைந்தனள் பின்னையும் வாழலாம் எனும் ஆசை மருந்தினே - கடல் வண்ணனாம் இராமனைச் சேர்ந்து இன்னும் வாழக்கூடும் என்ற அவா ஆகிய மருந்தினால், அவ் ஏழை ஆவி இறந்திலள் என்பர் - அந்த அறிவில்லாத சூர்ப்பணகை உயிர் விடவில்லை எனக் கூறுவர்; ஆல் - அசை.
காமத்தீயாம் நோயிலிருந்தும் அவள் சாகாதிருப்பதற்குக் காரணம் சூர்ப்பணகை இராமனை அடைந்து வாழலாம் என்ற ஆசை கொண்டமையாகும். இராமன் மீது கொண்ட ஆசையே மருந்தாகி அவளை வாழச் செய்தது. 'பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து' (குறள் 1102) என்ற கருத்து இங்கு ஒப்பு நோக்குதற்குரியது. உருக்காட்டுப் படலத்தில் சீதையின் துயர் மொழியில் 'பேணும் உணர்வே! உயிரே! பெருநாள் நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக் காணும் துணையும் கழிவீர் அலிர்' (5235) என்று வரும் பாங்கும் ஒப்பிடற்குரியது.
செய்கையின் ஆழியானை என்ற பாடம் கொண்டு சிவந்த கைகளையுடைய இராமனை எனவும் கொள்வர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Though she was like one caught in the fierce fire at the end of an age,
- that wretched woman did not lose her life," they say;
- because of the medicine of hope: "If I win him of the ocean hue,
- I can still go on living."
What the poem says
Cūrppaṇakai suffers as if burned in the fire that ends the world, yet she does not die. What keeps her alive is the hope of winning Irāmaṉ, the lord dark as the ocean, and living with him.
The same desire is both her disease and its cure. The commentary compares a Kuṟaḷ couplet in which the beloved is the only medicine for the sickness she causes, and Cītai's words in the Sundara Kāṇḍa, where only the hope of seeing Irāmaṉ keeps her alive.