கம்பராமாயணம் 2902 · ஆரணிய 5.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் - (இவன்) அருகில் உள்ள அழகிய பெண்; மாண்ட கற்புடையாள் மலர்மா மகள் என்னும் - பெருமை மிக்க கற்புடையவளான செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே என்று கூறுவாள்; வேண்டகிற்பின் தெறும் காமமே - (ஒரு தலைவனை) ஆசைப்பட்டால் (அப்போதே) அழிப்பதாம் ஆசை நோயே; அனல் வர மெய்யிடைத் தீண்டகிற்பது அன்றோ - நெருப்பைப் போல வெப்பமுண்டாக உடம்பில் சேர்வதல்லவா எனக் கூறுவாள். ஆல் - அசை.
திருமால் போன்ற இவன் அருகில் இருப்பவள் திருமகளே எனச் சூர்ப்பணகை நினைக்கிறாள். இதனால் அவன் தன்னை விரும்பான் என்பது குறிப்பு. 'மாண்ட கற்புடையாள்' என்பதற்கு அழிந்த கற்புடையவள் எனப் பொருள் கூறிச் சூர்ப்பணகையை இத் தொடர் குறிக்கும் என்பர். இதற்குச் சான்றாக முன்னர் வந்த 'தேயும் கற்பினாள்' (2757) என்ற தொடரைக் காட்டுவர். இராமனை உரு வெளித் தோற்றமாகச் சூர்ப்பணகை மீண்டும் மீண்டும் காண்பதால் 'ஈண்டு' என்றாள். பன்னிரண்டடிகள் காமத்தியல்பு கூறுகின்றன. இதனால் சூர்ப்பணகையின் காம நோய் நன்கு புலப்படும்.
இது பொதுப் பொருளால் சிறப்புப் பொருளை விளக்குவதால் பிறிது மொழிதல் எனும் அணியாம்.
(இப்பாடல் சிறந்த சுவடிகளிலும் சிறந்த அச்சுப்படிகளிலும் இல்லை. எனவே இதனை மிகைப் பாடலாகக் கொள்வர்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The lovely woman who is here is the great lady of the flower,
- of perfect chastity," she says;
- once one desires, does not burning desire
- touch the body like fire coming on?
What the poem says
Cūrppaṇakai decides that the woman beside Irāmaṉ must be Lakṣmī herself, the lotus goddess of perfect chastity, and so he will never want her. The poet adds a general truth: desire, once felt, burns the body like fire.
Some read "of perfect chastity" ironically, as "whose chastity is dead", and apply it to Cūrppaṇakai. The book notes that this verse is missing from the best manuscripts and printed editions, and is usually treated as an interpolation.