கம்பராமாயணம் 2908 · ஆரணிய 5.94

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊக்கித் தாங்கி விண்படர்வென் என்று உருத்து எழுவாளை - முயன்று இவனையும் எடுத்துக் கொண்டு வான்வழிச் செல்வேன் என்று கோபித்து மேற்கிளம்பிய சூர்ப்பணகையை; நொய்தினில் நூக்கி - (இலக்குவன்) எளிதில் கீழே தள்ளி; வெய்து இழையேல் என நுவலா - கொடுந்தொழிலைச் செய்யாதே என்று கூறி; மூக்கும் காதும் வெம் முரண் முலைக்கண்களும் முறையால் போக்கி - மூக்கையும் காதுகளையும் கொடிய வலிய முலைக் காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அறுத்தெறிந்து; போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான் - சினத்தை விட்டு முறுக்கிப் பிடித்த அவள் கூந்தலையும் விட்டான்.

மூக்கும் காதும் அறுத்தது அவளுக்கு அவலட்சணம் உண்டாக்குதற்காம். முலையை அறுத்தது அவள் பெண்மை நலம் சிதைத்தற்காம். 'காதிரண்டும் இல்லாதான் ஏக்கழுத்தம் செய்தலும்' (சிறுபஞ்சமூலம் 5) 'முலையிரண்டுமில்லாதாள் பெண்மை காமுற்றற்று' (குறள். 402) என்பவற்றுடன் ஒப்பிட்டுணரலாம். இனி மேல் வாயும் மேலுதடும் அறுத்த செய்தி பின்னர்க் காணப் பெறும் (2869). வான்மீகம் மூக்கும் காதும் மட்டுமே கொய்தான் எனக் கூறும். மேலும் முதல் நூலில் இராமன் சூர்ப்பணகையை இலக்குவனை அணுகுமாறு சொல்லவும் அவ்வாறு அவள் சென்று தன்னை ஏற்குமாறு கூற அவன் இராமனையே மணக்குமாறு கேட்கக் கூறினான். மீண்டும் இராமனை அவள் வேண்ட அவன் மறுக்கவே ஆத்திரத்தில் சீதை மீது பாய்ந்து உண்ண முயன்ற போது இராமனின் கட்டளைப்படி இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கையும் காதையும் போக்கினான். (ஆரணிய காண்டம் 18ஆம் சருக்கம்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As she rose in rage, crying, "I will lift him up and fly off into the sky,"
  2. he pushed her down easily, saying, "Do no cruel deed,"
  3. and her nose, her ears, and the nipples of her cruel, hard breasts, one after another,
  4. he cut away, and with his anger spent, let go of her twisted hair.

What the poem says

Cūrppaṇakai tries to carry Ilakkuvaṉ off into the sky, but he easily forces her down. He cuts off her nose, her ears and her nipples, then lets go of her hair, his anger spent.

Cutting off her nose and ears disfigures her; cutting her breasts takes away her womanhood. In Vālmīki only the nose and ears are cut, and only on Irāmaṉ's order, after Cūrppaṇakai has been sent back and forth between the brothers and finally attacks Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūkkit tāṅki,'viṇ paṭarveṉ 'eṉṟu uruttu eḻuvāḷai
nūkki, noytiṉil,'veytu iḻaiyēl 'eṉa nuvalā,
mūkkum, kātum, vem muraṇ mulaik kaṇkaḷum muṟaiyāl
pōkkip pōkkiya ciṉattoṭum, puri kuḻal viṭṭāṉ.