கம்பராமாயணம் 2909 · ஆரணிய 5.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அக்கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை - அந்த நேரத்தில் சூர்ப்பணகை வாயைத் திறந்து கதறிய ஓசை; திக்கு அனைத்தினும் சென்றது - எல்லாத் திசைகளிலும் சென்று பரவியது; தேவர் தம் செவியும் புக்கது - வானுலகில் உள்ள தேவர்களுடைய காதுகளிலும் சென்று நுழைந்தது; உற்றது புகல்வது என் - இனி அங்கு நடந்ததைச் சொல்ல வேண்டியது என்ன? மூக்கு எனும் புழையூடு உக்க சோரியின் - அவள் மூக்கு என்ற துளைகளின் வழியே வழிந்த இரத்தத்தினால்; உலகம் ஈரம் உற்று உருகியது - உலகம் முழுவதும் ஈரம் படிந்து கரைந்தது.
சூர்ப்பணகை தன் உறுப்பிழந்து இட்ட பேரொலி எட்டுத் திசைகளை எட்டியது மட்டுமன்று வானுலகையும் அடைந்தது என்றதால் பாதலத்தையும் எட்டியது என்பது குறிப்பு. அறுபட்ட மூக்கின் துளைகளிலிருந்து வழிந்த இரத்தத்தின் பெருக்காலும் வெப்பத்தாலும் உலகமே கரைந்தது. இது உயர்வு நவிற்சி அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The scream she let out at that moment, her mouth wide open,
- went to every quarter and entered even
- the ears of the gods; why tell what followed? Through the holes that had been her nose
- the blood poured out, and the world grew wet and melted.
What the poem says
Cūrppaṇakai's shriek of agony fills every direction and reaches heaven, and by implication the underworld too. Blood gushes from where her nose was, so much and so hot that the earth itself is soaked and seems to melt.
The poet deliberately exaggerates here to convey the scale of the outrage and of what will come of it.