கம்பராமாயணம் 291 · பால 5.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முத்து உருக்கொண்டு - முத்துக்கள் சேர்ந்து குழந்தை வடிவு கொண்டு; செம்முளரி அலர்ந்தால் - செந்தாமரை தன்னிடம் மலரப் பெற்றால்; ஒத்திருக்கும் எழில் உடை - (அதனை) ஒத்திருக்கும் அழகுடைய; இவ்வொளியால் எத்திருக்கும் எண்ணா - என்பதை எண்ணி; சத்துருக்கன் என நாமம் சாற்றினன் - சத்துருக்கன் எனப் பெயர்சூட்டினான்.
முளரி: தாமரை. எழில்: அழகு. திருக்கு: மாறுபாடு (குற்றம்). நாமம்: பெயர். சத்துருக்களை அழிப்பவன் என்பது பொருள். முதலடி: இல்பொருள் உவமை. அகப்பகை - புறப்பகைகளை ஒழிக்க வல்லவன் என்பதும் ஒரு பொருள். சத்துருக்கன் வெண்மை நிறமுடையவன் என்பதால் “முத்து உருக்கொண்டு” என்றார். கை, கால், முகம் மலர்ந்த தாமரை ஒத்திருந்தது என்பதால் “முளரி அலர்ந்தால் ஒத்து” என்கிறார். என்னா: செய்யாவகை என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இவனுக்கு எதிராக எழுபவை வேறு இன்மையின் இப்பெயர். அடக்கரு வலத்தவாகிய புலன்களை வென்றவன் என்றும் கொள்ளலாம். ஏனெனில் பொறி புலன்கள் அடங்கற்கரியன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If pearls took a body and red lotuses bloomed on it,
- it would resemble the beauty of this radiant one; by him
- every enmity will be destroyed: thinking this,
- he proclaimed his name 'Catturukkaṉ'.
What the poem says
The youngest prince is named Catturukkaṉ (Śatrughna), 'destroyer of enemies'. He is fair-skinned, so his body is like pearls given form, with face, hands and feet like red lotuses in bloom, an image of something that does not exist in nature.
The enemies may be inner ones as well, the unruly senses.