கம்பராமாயணம் 290 · பால 5.122

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலக்குநர் வஞ்சகர் - இனி வஞ்சர்களாகிய அரக்கர்கள்தாம் இறப்பவர்களாவார்; உம்பரும் உய்ந்தார் - தேவர்கள் உய்வு பெறுவார்கள்; நிலக் கொடியும் துயர் நீத்தனள் - நிலமகளும் துன்பம் நீங்கினாள்; விலக்க அரும் மொய்ம்பின் - (இத்தகைய பேற்றை உலகுக்குத் தரும்) நீக்க இயலாத வலிமை உடைய; இந்த விளங்கு ஒளிநாமம் - இந்த விளங்குகின்ற ஒளியின் பெயர்; இலக்குவன் என்ன இசைத்தனன் - இலக்குவன் என்று கூறினான்.

உலக்குநர்: அழிபவர் (உலத்தல்: அழிதல்). உம்பர்: தேவர்கள்; இடவாகு பெயர். நிலக்கொடி: நிலமகள்; கொடி: உவமை ஆகுபெயர். நீத்தல்: நீக்கல். மொய்ம்பு: வலிமை. இசைத்தனன்: கூறினான்.

சுமித்திரை பெற்ற பிள்ளைக்கு 'இலக்குவன்' என்று வசிட்டன் பெயர் சூட்டினான் என்பது கருத்து. லக்ஷ்மணன் என்பதற்கு உத்தம இலக்கணங்கள் அமையப் பெற்றவன் எனவும், கைங்கரிய லட்சுமியோடு கூடியிருப்பவன் என்பதும் பொருள் என்பர். நிலமகள் துயரம் நீங்குவது உறுதியாதலில் 'நீத்தனள்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The deceivers are doomed to perish; the gods are saved;
  2. the creeper that is Earth has shed her grief! This
  3. radiant one of irresistible strength: his name
  4. is Ilakkuvaṉ,' he declared.

What the poem says

Cumittirai's elder son is named Ilakkuvaṉ (Lakṣmaṇa). Vacittaṉ speaks of the destruction of the rākṣasas and the relief of the Earth as already accomplished, so certain is it.

The commentary explains the name as 'one marked with excellent qualities', or 'one endowed with the wealth of service', referring to Ilakkuvaṉ's devotion to Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ulakkunar vañcakar; umparum uyntār;
nilakkoṭiyum tuyar nīttaṉaḷ! inta
vilakku aru moympiṉ viḷaṅku oḷi nāmam,
ilakkuvaṉ' eṉṉa icaittaṉaṉ, aṉṟē,