கம்பராமாயணம் 289 · பால 5.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப - உள்ளங்கையில் விளங்கும் நெல்லிக்கனியைப் போல; விரத மறைப் பொருள் மெய் நெறிகண்ட வரதன் - விரதங்களைக் கடைப்பிடித்தும் மறைகளின் பொருளறிந்ததும் உண்மை நெறி கண்டுணர்ந்த வசிட்டன்; உதித்திடு மற்றைய ஒளியை - அடுத்துத் தோன்றிய ஒளிமயமான குழந்தையை; பரதன் எனப் பெயர் பன்னினன் - பரதன் என்னும் பெயரிட்டு அழைத்தான்.
கரதலம்: உள்ளங்கை. உள்ளங்கையில் கொண்ட நெல்லிக் கனி, ஒரு பொருளை உள்ளும் புறமும் ஒன்றாய் அறிதற்குக் காட்டும் உவமையாகக் கொண்டு கூறுவர் பெரியோர். புறத்தே இத்தனை வரிகள் இருப்பதால் அகத்தே இத்தனை வரிகள் இருக்கும் என்று கூற இயல்வதால் “அங்கைக் கனி” என்ற உவமை கூறப்படும். மறைகளின் உண்மைப் பொருளை நன்கறிந்த வசிட்டனது பெருமை இதனால் புலனாகும். கடுப்ப: ஒப்ப (போல). விரத நெறியால் மறைப்பொருள் கைவரும். அதன் காரணமாக மெய்ந்நெறி துலங்கும் என்பது கருத்து. இராமனை மெய்ப்பொருள் என்றும், மற்றைய மூவரையும் “ஒளி” என்றது கருதத்தக்கது. பன்னுதல்: சொல்லுதல். அன்றே: அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As one sees an amla fruit gleaming in the palm of the hand,
- the boon-giver who had seen the true path, the meaning of the Vedas reached through vows,
- to the next radiance that had dawned
- gave the name 'Paratan'.
What the poem says
Vacittaṉ names Kaikēyi's son Paratan. Vacittaṉ is said to know the Vedas as clearly as one sees a gooseberry held in the open palm, a proverbial image for perfect, inside-and-out knowledge.
Irāmaṉ was called 'the true Reality'; the other three princes are each called a 'radiance'.