கம்பராமாயணம் 288 · பால 5.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரா மலைய - ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர் கைக்கரி - அதனால் சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான கஜேந்திரன்; அரா அணையில் துயில்வோய் என - பாம்பணையில் துயில்பவனே என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள்-அந்த நாளிலே விரைந்து அந்த முதலையை அழித்து யானையைக் காத்தருளிய; மெய்ப்பொருளுக்கு - உண்மைப் பொருளான அப்பரமனுக்கு; “இராமன்” எனப் பெயர் ஈந்தனன் - இராமன் என்னும் பெயரை (வசிட்டன்) சூட்டினான்.
கரா: முதலை. தளர் கரி: வினைத்தொகை. எய்த்தல்: இளைத்தலுமாம். அராஅணை: அரவணை (பாம்புப் படுக்கை). விராவி: சேர்தலுமாம். அராஅணைத் துயில்வோய் என விளித்து தான் பன்னாள் துன்புறவும் அது பற்றிக் கவலை உறாமல் உறங்குகின்றாயே பெருமானே என்ற குறிப்புடையது. மெய்ப்பொருள்: உண்மைப் பொருளாகிய பரமன். ராமன்: அழகன். அன்றே: அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the crocodile seized him and the elephant, his trunk failing, grew weak,
- and cried, 'You who sleep on the serpent couch!', on that day
- he came swiftly and saved him: to that true Reality
- he gave the name 'Irāmaṉ'.
What the poem says
Vacittaṉ names the eldest son Irāmaṉ, which the commentary glosses as 'the beautiful one'. The child is identified with Viṣṇu, who rescued the elephant king Gajendra when a crocodile seized its foot and the exhausted elephant called out to the god sleeping on the serpent Ādiśeṣa.
The cry carries a note of reproach: you sleep while I suffer.