கம்பராமாயணம் 287 · பால 5.119

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இ தகை மா நகர், ஈர் அறு நாளும்,
சித்தம் உறும் களியோடு சிறந்து ஏ,
தம் தமை ஒன்றும் உணர்ந்தில; தாவா
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.

பொருள் · Meaning in Tamil

இத்தகைய மாநகர் - இந்த விதமாக அயோத்தி நகர மக்கள்; ஈர் அறு நாளும் - அந்தப் பன்னிரண்டு நாட்களும்; சித்தம் உறும் களியொடு சிறந்து - மனம் பொருந்திய மகிழ்ச்சியால் சிறந்து; தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் - தங்கள் தங்களையே ஒன்றும் உணராதவர் ஆயினர்; தாவா மெய்த்தவன் - குறையாத தவத்தை உடைய வசிட்ட முனிவன்; நாமம் விதிப்ப மதித்தான் - அக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட எண்ணினான்.

தகை: தன்மை. மா: அழகு; பெருமையுமாம். அரச குலத்தவருக்குப் பிறந்த பன்னிரண்டு நாட்கள் கழிந்த பிறகே பெயர் சூட்டுதல் விதியாதலின் “ஈர் அறு நாள்” என்றார். “பத்தும் கடந்த இரண்டாம் நாள்” என்பர் பெரியாழ்வாரும். உறு: மிகுதி. சித்தம்: மனம். களி: களித்தல். தத்தமை: தங்கள் தங்களை. மாநகர் எழுவாய்; உணர்ந்திலர் பயனிலை. அந்நகரத்தார் உணர்ந்திலர் என்பது பொருள். நாமம் விதித்தல்: பெயர் சூட்டுதல்.

பிள்ளைகள் பிறந்த பன்னிரண்டு நாட்களும் அளவற்ற மகிழ்ச்சியால் அந்நகர மக்கள் தங்களையே மறந்து மகிழ்ச்சியில் திளைத்தனர். பன்னிரண்டு நாட்கள் கழிந்த பின்னர் வசிட்டர் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டக் கருதினார் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. This great city, for all twelve days,
  2. excelling in a joy that filled the mind,
  3. knew nothing of themselves; then the true ascetic
  4. whose penance never fails resolved to give the names.

What the poem says

For twelve days after the births the people of Ayōtti are so lost in celebration that they forget themselves. Then Vacittaṉ prepares to name the princes, since in royal families the naming ceremony takes place after the twelfth day.

The commentary compares Periyāḻvār's phrase for the naming day of Kṛṣṇa: 'the second day after ten'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ittakai mā nakar, īr aṟu nāḷum,
cittam uṟum kaḷiyoṭu ciṟantē,
tattamai oṉṟum uṇarntilar; tāvā
meyt tavaṉ nāmam vitippa matittāṉ.