கம்பராமாயணம் 2912 · ஆரணிய 5.98

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல்குடிப் பிறந்தாள் - துன்பம் என்பது பயந்து இதற்கு முன் எப்போதும் அணுகாத பழைய அரக்கர் குடியில் பிறந்த சூர்ப்பணகை, விண்ணிடை உயரும் - (துன்பம் தாங்காமல்) வானில் உயர்ந்து எழுவாள்; மண்ணிடை விழும் - தரை மீது விழுவாள்; கிடந்து உழைக்கும் - தரையில் வீழ்ந்தபடியே கிடந்து மிக வருந்துவாள்; அயரும் - தளர்ச்சி உறுவாள்; கை குலைத்து அலமரும் - கைகளைப் பிசைந்து மனம் சுழல்வாள்; ஆர் உயிர் சோரும் - அரிய உயிர் சோர்ந்து மூர்ச்சை அடைவாள்; பெயரும் - பின் மூர்ச்சை தெளிந்து எழுந்து செல்வாள்; பெண் பிறந்தேன் பட்ட பிழை எனப் பிதற்றும் - பெண் பிறவியாய்ப் பிறந்து நான் பட்ட துன்பம் இது எனப் பிதற்றுவாள்.

பிரமனை முதல்வனாகக் கொண்ட பழைய குடி சூர்ப்பணகை பிறந்த குடியாம். எனவே 'தொல் குடி' எனப்பட்டது. இது வரை துன்பம் அக் குடியைத் தொடர அஞ்சியது என்று கூறும் போது சூர்ப்பணகையின் இச்செயலால் இனி மேல் துன்பம் அக்குடியைத் தொடரப் போகிறது என்பது புலனாம். 'உளைக்கும்' எனப் பாடம் கொண்டு ஊளையிடுவாள் எனப் பொருள் கூறுவர். மேலும் இதற்கு வருந்துதல் எனவும் உரைப்பர். உறுப்பிழந்த பெண் எவ்வாறு துன்பப்படுவாள் என்பதை மிக விளக்கமாக பல்வேறு வினை அடுக்குகளால் இப்பாடல் காட்டும். பெண் பிறவி என்பதே துன்பத்திற்குரியது என அரக்கர் குலப்பெண்ணும் எண்ணுவது கருதற்குரியது. துயர் அஞ்சுதல் என்பது மரபு வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She rises into the sky; she falls to the ground; she lies there writhing;
  2. she grows faint; she wrings her hands and reels; her life ebbs;
  3. she gets up and goes; she raves, "This is the price of being born a woman!",
  4. she who was born of an ancient line that sorrow itself had feared to touch.

What the poem says

The poet piles up short verbs to show Cūrppaṇakai's frantic pain. She flies up and crashes down, writhes, faints, wrings her hands, comes to, and raves that this is what comes of being born a woman.

Her family, descended from Brahmā, has never known sorrow; it was as if sorrow feared to approach them. The hint is that, through her, sorrow will now come to all of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyarum viṇṇiṭai; maṇṇiṭai viḻum; kiṭantu uḻaikkum;
ayarum; kai kulaittu alamarum; ār uyir cōrum;
peyarum;'peṇ piṟantēṉ paṭṭa piḻai 'eṉap pitaṟṟum;
tuyarum añci muṉ toṭarntilāt tol kuṭip piṟantāḷ.