கம்பராமாயணம் 2913 · ஆரணிய 5.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சூர்ப்பணகை) மூக்கினை ஒற்றும் - இரத்தம் வழியும் மூக்கை ஆடையால் ஒற்றிக் கொள்வாள்; உலை உறு தீ என உயிர்க்கும் - கொல்லன் உலைக் களத்தில் எழும் தீச்சுடர் போன்று பெருமூச்சு விடுவாள்; கையினை நிலத்தினில் எற்றும் - கைகளை தரை மீது ஓங்கி அடிப்பாள்; இணைத் தடங் கொங்கை பற்றும் பார்க்கும் - தன் இரு பெரிய முலைகளைக் கைகளால் பற்றிப் பார்ப்பாள்; மெய் வெயர்க்கும் - உடல் வேர்ப்பாள்; தன் பருவலிக் காலால் சுற்றும் ஓடும் - தனது பெரிய வலிமை படைத்த கால்களால் சுற்றி ஓடி வருவாள்; போய் சோரி நீர் சொரிதரச் சோரும் - ஓடிப் போய் இரத்தம் பொழியத் தளர்வாள்.
ஒற்றுதல் மேலும் இரத்தம் பெருகாமலிருப்பதற்காம். உலை உறு தீயைப் பற்றி - 'உலைமுகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே' (527) எனவும் 'கொல்லன் ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான்' (1506) எனவும் வருதல் கொண்டு நன்குணரலாம். சுற்றும் ஓடும் எனத் தனித் தனியாகவும் பொருள் காண்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She dabs at her nose; she breathes like fire in a forge;
- she beats her hands on the ground; she clutches her two large breasts
- and looks at them; her body sweats; on her huge, strong legs
- she runs round and round; she runs off, and sinks down as the blood pours out.
What the poem says
Another verse of frantic actions. Cūrppaṇakai dabs at the bleeding wound, breathes like a blacksmith's bellows, beats the ground, looks in horror at her mutilated breasts, and runs about until loss of blood makes her collapse.