கம்பராமாயணம் 2914 · ஆரணிய 5.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊற்றும் மிக்க நீர் அருவியின் - பொழிகின்ற மிகுந்த நீருள்ள அருவி போல; ஒழுகிய குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள் - வழிந்தோடும் இரத்தச் சேறாம் நீர்ப் பெருக்கில் அலைபவளாம் சூர்ப்பணகை; ஆற்றுகிற்கிலள் - தன்னால் பொறுக்க முடியாதவளாய்; தேவரும் இரிய - அவள் அலறலைக் கேட்டுத் தேவர்களும் நிலை குலைந்து ஓட; கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி - யமனும் அஞ்சும் தன் குலத்தில் பிறந்த அரக்கர் பெயர்களை எல்லாம் எடுத்துக் கூறி; பற்பல பன்னி நின்று அழைத்தாள் - பல பலவாறு விளக்கமாகக் கூறி நின்று கூப்பிட்டாள்.
ஊற்றும் - இடைவிடாது பொழியும், தேவரும் அவள் குரல் கேட்டு அஞ்சி ஓடினர்; யமனும் அது கேட்டு மனம் துணுக்குற்றான் என்பதால் அவளது குரலின் ஆற்றல் புலனாம். பன்னுதல் - மீண்டும் மீண்டும் கூறுதல். பெருவெள்ளமாய் இரத்தம் பெருகியதால் அவள் நின்ற இடம் சேறாயிற்று.
தேவரும், கூற்றும் - என்பனவற்றில் உள்ள உம்மைகள் உயர்வு சிறப்பின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wandering in a flood of muddy blood that streamed
- like a waterfall pouring out its full waters, unable to bear it,
- she called out, so that even the gods fled and Death himself shrank,
- the names of all her kin, repeating them over and over.
What the poem says
So much blood runs from Cūrppaṇakai that the ground around her turns to mud. Unable to bear the pain, she starts calling out the names of her demon kin again and again.
Her cries are so terrible that the gods run and even Death is shaken. The next verses give her laments to each of her brothers in turn.