கம்பராமாயணம் 2917 · ஆரணிய 5.103

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆர்த்து ஆணைக்கு அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த போர்த்தானை இந்திரனைப் பொருது - ஆரவாரம் செய்து யானைகளுக்கு அரசனான ஐராவதத்தைச் செலுத்தித் தேவர் கூட்டத்துடனே நெருங்கிய போர்ப் படையோடு கூடிய இந்திரனை எதிர்த்துப் போர் புரிந்து; அவனைப் போர் தொலைத்து வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை - அவனைப் போரிலே அழியச் செய்து அச்சத்தால் உடல் வியர்த்துத் தப்பி உயிர் கொண்டு ஓடிப்போனவனை; பண்டு வெரிந் பார்த்தானே - முன்பு முதுகிட்டோடப் பார்த்த இராவணனே; யான் பட்ட பழி வந்து பாராயோ - நான் இங்கு அடைந்த இழிவை நீ வந்து பார்க்க மாட்டாயோ?

ஆனைக்கு அரசு - இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் எனும் வெள்ளை யானையே. வெரிந் - புறமுதுகு.

இப்பாடலுக்கு வேறு வகையில் பொருள் காண்பதும் உண்டு. தேவேந்திரனை வென்ற இந்திரசித்தே! பெருவலிமை படைத்த நீ எனக்கு நேர்ந்த இப்பழியைப் பார்த்து இதற்கு மாற்றம் செய்யமாட்டாயா? என்று சூர்ப்பணகை கதறினாள் என்பர்.

இராவணன் திக்கு விசயம் செய்து யாவரையும் வென்ற போது விண்ணுலகு சென்று அங்கும் இந்திரனுடன் போர் புரிந்தான். அவன் தேவர் படையோடு ஐராவத யானை மீதேறி இராவணனும் வியக்கப் போர் புரிந்தான். அப்போது இராவணன் மகன் மேகநாதன் மாயை புரிந்து போர் செய்த போது இந்திரன் புறமுதுகிட்டோட அவனை மாயைப் பாசத்தால் பிணித்துச் சிறையில் அடைத்தான். அப்போது பிரமன் முதலான தேவர்கள் வந்து அவனுக்கு 'இந்திரசித' என்ற பட்டமும் வரமுமளித்து இந்திரனை மீட்டதாகப் புராண வரலாறு கூறும்.

முன் பின் பாடல்களில் இராவணனை விளிப்பதால் இதுவும் இராவணனை அழைத்ததாகவே கொள்வது பொருத்தம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Indra, who came roaring, driving the king of elephants, pressing on with his battle-host and the hosts of the gods,
  2. you fought, and destroyed his army in battle;
  3. he sweated, fled with his life, and you once
  4. saw his back! Will you not come and see the shame I have suffered?"

What the poem says

Cūrppaṇakai reminds Irāvaṇaṉ of his victory over Indra. The king of the gods rode against him on Airāvata, the king of elephants, with the armies of heaven, and in the end turned and fled, sweating with fear.

In the legend Irāvaṇaṉ's son Mēkanātaṉ captured Indra in that war and so earned the name Intiracittu, "conqueror of Indra." Some therefore read this verse as addressed to the son. Since the verses around it call on Irāvaṇaṉ, the commentary prefers to read it as addressed to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttu, āṉaikku aracu unti, amarar kaṇattoṭum aṭarnta
pōrt tāṉai intiraṉaip porutu, avaṉaip pōr tolaittu,
vērttāṉai, uyir koṇṭu mīṇṭāṉai, verin paṇṭu
pārttāṉē! yāṉ paṭṭa paḻi vantu pārāyō?