கம்பராமாயணம் 2920 · ஆரணிய 5.106

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் - தேனைக் கொண்ட நறுமணமிக்க கற்பகப்பூ மாலை அணிந்த தேவர்களையும்; தெறும் ஆற்றல் தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ - அழிக்கின்ற வல்லமையை உடைய இராவணனுக்கும் அவன் தம்பிமார்க்கும் (இப்போது அவ்வலிமை) நீங்கி விட்டதோ? ஊன் உடைய உடம்பினராய் - தசையும் உதிரமுமுள்ள உடம்பை உடையவர்களாய், எம் குலத்தோர்க்கு உணவு ஆய - எமது அரக்க குலத்தார்க்கு இரையாக உள்ள; மானுடவர் மருங்கே புக்கு வலி ஒடுங்கினதோ - மனிதரிடத்துச் சென்று அடங்கியதோ?; அம்மா - இது வியப்பிற்குரியது;

தம்பியர் - இராவணனின் தம்பிமார்களாகிய கும்பகர்ணன், கரன் முதலியோர். வீடணன் இவர்கள் செயலுக்கு உடன் செல்லான். ஆகையால் அவனை இவள் நினைக்கவில்லை எனலாம். ஊனுடைய உடம்பினர் என்றதால் மானுடர் அரக்கர்க்கு உணவாகும் தகுதியுடையவரன்றி வேறு சிறப்பில்லை என்பது குறிப்பு.

உண்பாராகிய அரக்கர்க்கு உண்ணப் படுபவராய மானிடர் வலிமை பெற்றவர் ஆய்விட்டாரே என வியப்பு எழுந்ததாம். அம்மா என்ற சொல் இதனைக் குறிக்கும். தேவரையும் - உயர்வு சிறப்பும்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Has the power to destroy even the gods with their fragrant garlands
  2. dripping honey gone from Irāvaṇaṉ and his brothers?
  3. Has their strength gone and shrunk into the side of men,
  4. creatures of flesh who are food for our race? How strange!"

What the poem says

Cūrppaṇakai cannot understand how the brothers who have humbled the gods could let men defeat them, since to demons men are only flesh to eat. It seems to her as if their strength has passed over to the humans.

The brothers she means are Kumpakaruṇaṉ, Karaṉ and the others. Vīṭaṇaṉ is not included, since he never takes part in their crimes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṉuṭaiya naṟun teriyal tēvaraiyum teṟum āṟṟal
tāṉ uṭaiya irāvaṇaṟkum, tampiyarkkum, tavirntatō?
ūṉuṭaiya uṭampiṉar āy, em kulattōrkku uṇavu āya
māṉuṭavar maruṅkē pukku oṭuṅkiṉatō vali? ammā!