கம்பராமாயணம் 2922 · ஆரணிய 5.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணிகேட்ப - தேவேந்திரனும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரம்மாவும் தேவர்களும் நீ இட்ட கட்டளைகளைக் கேட்டுக் குற்றேவல் செய்ய; சுந்தரி பல்லாண்டு இசைப்ப - இந்திராணி 'பல்லாண்டு' எனும் வாழ்த்துப் பாடலைப் பாட, உலகு ஏழும் தொழுது ஏத்த - ஏழு உலகங்களில் உள்ளவர்கள் வணங்கிப் புகழ; சந்திரன் போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை நடுவே - முழுமதி போன்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் கீழே நீ கொலு வீற்றிருக்கும் சபையின் நடுவில்; அடியேன் வந்து நாணாது முகம் காட்ட வல்லேனோ - அடியாளாகிய நான் வந்து வெட்கமின்றி (மூக்கும் காதும் அறுபட்ட) என் முகத்தைக் காட்டும் தகுதி உடையேனோ? (ஆகேன் என்றவாறு).
சுந்தரி - தேவமங்கையர் எனவும் கூறுவர். 'பொன்னகர் மடந்தையர் விஞ்சையர் பூவையர் பன்னக வனிதையர் இயக்கர் பாவையர், முன்னின பணி முறை மாறி முந்துவார்' (4883) என ஊர்தேடு படலத்தில் வந்த செய்யுள் இதற்கு மேலும் விளக்கம் தரும்.
பல்லாண்டு - பல ஆண்டுக் காலம் வாழ வாழ்த்துதல். பெரியாழ்வார் பாடிய 'திருப்பல்லாண்டு' நினைத்தற்குரியது. (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு 1-12). உலகேழு - கீழேழு மேலேழு உலகங்களைக் குறிக்கும். அடியேன் - தங்கை நிலையைக் குறிக்கும். இப்பாடல் இராவணன் கொலு மண்டபச் சிறப்பும் அங்கு உறுப்பறைகள் செல்லல் கூடாது என்பதையும் சுட்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "While Indra, Ayaṉ on the flower and the gods wait on your commands,
- while the lovely queen of heaven sings 'Long may you live,' and all seven worlds bow in praise,
- into the midst of your court, where you sit beneath a single umbrella like the moon,
- can I, your servant, come and show my face without shame?"
What the poem says
Cūrppaṇakai pictures Irāvaṇaṉ's court: Indra, Brahmā and the gods wait on his orders, the queen of heaven sings his praises, and he sits under a moon-white royal umbrella while the seven worlds bow.
How, she asks, can she go there now with her face mutilated? A disfigured person was not supposed to appear at such a court.