கம்பராமாயணம் 2923 · ஆரணிய 5.109

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி , மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க , நான் இருந்து புலம்புவதோ ?
கரன் இருந்த வனம் அன்றோ ? இவை படவும் கடவேனோ ?
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ ! அண்ணாவோ !

பொருள் · Meaning in Tamil

அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ - சிவன் வீற்றிருக்கும் கயிலாய மலையைப் பேர்த்தெடுத்த அண்ணனே! அண்ணனே!!; உரன் நெரிந்து விழ - மார்பு சிதைந்து கீழே விழும்படி; என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த நரன் இருந்து தோள் பார்க்க - என்னைக் காலால் உதைத்து உருண்டு விழச் செய்து என் மூக்கை அரிந்த மனிதன் தன் தோளைப் பார்த்துப் பெருமிதம் கொள்ள; நான் கிடந்து புலம்புவதோ - நான் ஆதரவு இன்றித் தனியே இருந்து அழுவது தகுதியோ? கரன் இருந்த வனம் அன்றோ - இது கரன் ஆட்சி செலுத்தியிருக்கும் காடு அல்லவா?; இவை படவும் கடவேனோ - (இக்காட்டிலே) நான் இக்கேடு அடையத் தகுவேனோ?

சூர்ப்பணகையை இலக்குவன் உதைத்து உருட்டி மூக்கரிந்ததை முன் வந்த பாடல்கள் கூறும் (2824-25). தோள் பார்த்தல் - வீரச் செயல் புரிந்தவர்கள் தம் தோள்களைச் செருக்குடன் பார்த்து மகிழ்தல். இப்பொருள் வெளிப்பட 'எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டும் நோக்கி' (சிந்தா. 847) 'கோவனும் மக்களும் குளிர்ந்து தோணோக்கினர்' (சிந்தா. 1843) என்ற தொடர்கள் உள்ளன.

கரன் இருந்த வனம் என்பது சூர்ப்பணகைக்கு உறு துணையாக இராவணனால் கரன் அமர்த்தப் பெற்ற வனம் என ஆம்.

'அண்ணாவோ அண்ணாவோ' என இரட்டித்து வந்தது போல் பின்னரும் 'இராவணவோ! இராவணவோ!!' (2841) எனவும் 'மருகாவோ! மருகாவோ!!' (2842) எனவும் வருதல் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "With my chest crushed, he kicked me and rolled me over and cut off my nose,
  2. and that man sits there looking proudly at his shoulders, while I lie here wailing?
  3. Is this not the forest where Karaṉ rules? Must I suffer such things?
  4. Brother who lifted the mountain where Araṉ dwells! Brother!"

What the poem says

Cūrppaṇakai tells over her humiliation. The man kicked her, rolled her on the ground and cut off her nose, and now admires his own shoulders while she lies here crying. To look at one's shoulders was the gesture of a warrior after a feat.

This is supposed to be Karaṉ's forest, where she should be safe. She ends with a double cry to the brother who lifted Śiva's mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uraṉ nerintu viḻa eṉṉai utaittu uruṭṭi, mūkku arinta
naraṉ iruntu tōḷ pārkka, nāṉ kiṭantu pulampuvatō?
karaṉ irunta vaṉam aṉṟō? ivai paṭavum kaṭavēṉō?
araṉ irunta malai eṭutta aṇṇāvō! aṇṇāvō!