கம்பராமாயணம் 2926 · ஆரணிய 5.112

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒரு காலத்து , உலகு ஏழும் உருத்து எதிரத் தனு ஒன்றால் ,
திருகாத சினம் திருகித் திசை அனைத்தும் செல நூறி ,
இரு காலில் , புரந்தரனை இருஞ் சிறையின் இடுவித்த
மருகாவோ ! மானிடவர் வலி காண வாராயோ ? '

பொருள் · Meaning in Tamil

ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர - முன்னொரு காலத்தில் ஏழு உலகங்களும் சினந்து எதிர் வந்து போர் செய்ய; தனு ஒன்றால் திருகாத சினம் திருகி - தன் ஒரு வில்லால் தணியாக் கோபம் முதிர்ந்து; திசை அனைத்தும் செல நூறி - எல்லாத் திக்குகளிலும் அஞ்சி ஓடிச் செல்ல அழித்து; புரந்தரனை இருகாலில் இருந்தளையில் இடுவித்த - இந்திரனின் இரண்டு கால்களிலும் வலிய விலங்குகளிட்டுப் பிணித்த; மருகாவோ - மருமகனாம் இந்திரசித்தே!; மானிடவர் வலி காண வாராயோ - இந்த மனிதர்களின் வலிமையைக் காண வரமாட்டாயா?

முன்பு இராவணன் ஏழுலகங்களையும் வென்ற போது அவனுக்குத் துணையாக அவன் மகன் இந்திரசித்துவும் சென்று போரிட்டுப் பலரையும் வென்ற நிகழ்ச்சியைச் சூர்ப்பணகை நினைத்து இவ்வாறு கூறுகின்றாள். ஏழுலகங்களையும் இந்திரசித்து தன் ஒரு வில்லாலேயே வென்றமையால் அவன் வலிமை நன்கு புலப்படும். அத்தகையோன் மானிடவர் வலிமை காண்பது மட்டுமின்றி அவர் வில்லாற்றலையும் வீழ்த்துவான் என்பது குறிப்பு. 'இருஞ் சிறையிலிட வைத்த' எனப் பாடம் கூறி இந்திரனைப் பெரிய சிறையிலடைத்தமையைக் கூறுவர். இந்திரன் இவனிடம் பல முறை தோற்றான் என்பதை யுத்த காண்ட நாகபாசப் படலத்தில் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Once, when all seven worlds rose against you in anger, with a single bow,
  2. your unrelenting fury rising, you scattered them in every direction,
  3. and on both his feet you had Purantaraṉ put
  4. in heavy fetters, nephew! Will you not come and see the strength of these men?"

What the poem says

Cūrppaṇakai goes on calling to Intiracittu. She recalls how he once fought all seven worlds with a single bow and scattered them, and put Indra, here called Purantaraṉ, "destroyer of cities," in chains.

She challenges him to come and see the "strength" of these mere men, sure that he could overcome them. Intiracittu's power will be shown again in the war cantos, when he binds Irāmaṉ and Ilakkuvaṉ with the serpent weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oru kālattu, ulaku ēḻum uruttu etirat taṉu oṉṟāl,
tirukāta ciṉam tirukit ticai aṉaittum cela nūṟi,
iru kālil, purantaraṉai irunta taḷaiyil iṭuvitta
marukāvō! māṉiṭavar vali kāṇa vārāyō? '