கம்பராமாயணம் 2928 · ஆரணிய 5.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று இன்ன பல பன்னி - என இவ்வாறு பலவற்றைச் சொல்லி; இகல் அரக்கி அழுது இரங்க - வலிய அந்தச் சூர்ப்பணகை புலம்பி வருந்தி; பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து - அழகு மிக்க (அத்தவச்சாலையின்) நிலத்திடத்துப் புரண்டழும் காலத்து; வன் திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை - மிகவலிய கையில் வில்லை ஏந்தி நெடுந் தோளுடைய மரகதம் போன்ற மலை எனும்படி உள்ள இராமன்; அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து நின்று வந்தான் - அக்கோதாவரி ஆற்றின் துறையில் விதி முறைப்படி செய்யும் நாட்கடன்களைச் செய்து முடித்து அங்கிருந்து தவச்சாலை நோக்கி வந்தான்.
பன்னுதல் - பலமுறை வருந்திக் கூறுதல். முன்னரும் 'தன் குலத்தினோர் பெயரெலாங் கூறி ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று அழைத்தாள்' (2831) என வரும். பொன் - அழகு. 'பொன் புனைந்த கழலடியோன்' (பு. வெ. மாலை 7.2. கொளு) என்று இப்பொருளில் பயன்பட்டுள்ளது. பொழுது - இங்குக் காலையைக் குறிக்கும். இராமனுக்கு மரகதமலை இக்காப்பியத்தில் பல இடங்களில் 'மரகதப் பெருங்கல்' (532) 'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால்வரை' (5273) எனக் குறிக்கப் பெறும். இராமன் கடன்களாற்றுவதால் தவத்தின் குறை தீர்ந்தது எனவும் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she lamented, saying many such things over and over, the fierce demoness weeping and wailing
- and rolling on the ground that glittered like gold, at that moment,
- having finished at that river the remaining rites of his full penance,
- the emerald mountain came, with long shoulders and a strong, firm hand bearing the bow.
What the poem says
While Cūrppaṇakai is still rolling on the ground and wailing out the names of her kin, Irāmaṉ comes back from the Godāvarī, where he has finished his morning rites.
The poet calls him an emerald mountain, an image used for his dark beauty throughout the epic, with his bow in his strong hand.