கம்பராமாயணம் 2939 · ஆரணிய 5.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உங்கை ஆக்கரிய மூக்கு அரியுண்டாள் - "உன் தங்கை (சூர்ப்பணகை) படைப்பதற்கருமையான மூக்கு அறுபட்டாள்", என்றாரை நாக்கு அரியும் தயமுகனார் - நாக்கை அறுக்கும் பத்துத் தலையுடைய இராவணனார்; நாகரிகர் அல்லாமை - கண்ணோட்டம் உடையவர் அல்லாமையால், மூக்கு அரிந்து - என் மூக்கை அறுத்து; நும் குலத்தை முதல் அரிந்தீர் - உம் குலத்தின் வேரையே அறுத்தவர் ஆனீர்; இனி உமக்குப் போக்கு அரிது - இனிமேல் உமக்குத் தப்பிப் பிழைக்கும் வழி இல்லை; இவ் அழகை எல்லாம் புல்லிடை உகுத்தீரே - இந்த அழகையெல்லாம் புல் அடர்ந்த காட்டில் சிந்தினவர் ஆயினீரே!; ஏ - அசை.
மூக்கு என்றது அத்துடன் காதுகளையும் முலைகளையும் குறித்து நின்றது. தயமுகனார் இராவணனின் பத்துத் தலை உடைமையைச் சுட்டுகிறது. நாகரிகம் - கண்ணோட்டம். 'பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' (குறள். 580) என்ற ஆட்சியைக் காண்க. 'நாகரிகத்து' (பெருங். 1.35.214) எனப் பெருங்கதையிலும் இப்பொருளில் வந்துளது. தங்கையின் மூக்கரிதல் கேட்டு இராவணன் இராமனின் குல முதலை அரிதல் உறுதி எனச் சூர்ப்பணகை கூறுகிறாள்.
இராமன் மறையின் அவன் அழகும் அழியுமே எனத் தன் காம வேகத்தில் சூர்ப்பணகை புலம்புகிறாள். இனி, அழகின் பொருளாக இருந்த தன் மூக்கை அரிந்து வீணாக்கி விட்டமையைச் சுட்டினாள் என்பர். புல்லிடை உகுத்தல் - வீணாக்கல். 'புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல்' எனக் கூனி கைகேயியிடம் கூறுவாள் (14068). பரதன் கோசலையிடம் சூளுரை கூறியபோதும் 'ஆண் தொழில் புல்லிடை உகுத்தனென்' என்பான். (2214). தயமுகனார் - வடசொல் திரிபு. அரிந்தீர் - காலவழுவமைதி. இப்பாடலில் உடனிகழ்ச்சி அணி உளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Irāvaṇaṉ of the ten faces cuts out the tongue of anyone who says,
- 'Your sister has had her matchless nose cut off'; being without courtesy,
- by cutting off my nose you have cut away your race at its root; now
- there is no escape for you; all this beauty you have spilled on the grass!"
What the poem says
Cūrppaṇakai warns that Irāvaṇaṉ would cut out the tongue of anyone who merely brought him news of her mutilation. Cutting off her nose, the brothers have cut away the root of their own family, and there is now no escape for them.
She laments that all their beauty will be wasted, spilled on the grass like nectar. The phrase may also mean the beauty they have destroyed in her.