கம்பராமாயணம் 2940 · ஆரணிய 5.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்னை நீர் உயிர் காக்கின் - (என் ஆசையை நிறை வேற்றி) என் உயிரை அழியாமல் நீர் காப்பீரானால்; யான் காப்பென் - நான் உங்களை இராவணனாரிடமிருந்து காப்பேன்; அல்லால் இனி அவ் இராவணனார் உளர் - அல்லாவிடில் உம்மை அழிக்க என் அண்ணனாம் அந்த இராவணனார் இருக்கிறார்; (அதனால்) வான் காப்போர் - மேலுலகைக் காக்கும் தேவர்களிலும்; மண்காப்போர் - நிலவுலகைக் காக்கும் அரசர்களிலும்; மாநாகர் வாழ் உலகம் காப்போர் - பெரிய நாகர்கள் வாழும் உலகங்காப்போரிலும்; தங்கள் தலைகாத்து நின்று - தங்களுடைய தலையை அறுபடாமல் காத்து; உங்கள் ஊன் காக்க உரியார் யார் என்றாள் - உங்களுடைய உடல்களைப் பாதுகாக்கத் தக்கவர் யார் என்று கேட்டாள். (ஒருவருமில்லை, என்னைத் தவிர). தான் - அசை.
மண்ணுலகு விண்ணுலகு மற்றெல்லா உலகுகள் ஆகியவற்றில் உள்ளவர்கள் இராவணனுக்கு அடிப்பட்டவரே. அவர்களில் எவரும் இராமனைக் காக்க இராவணனை எதிர்த்து வாரார். எனவே 'உங்களைக் காக்க நான் ஒருத்தியே உளேன்' எனச் சூர்ப்பணகை கூறினாள்.
ஊன் - உடல் 'ஊனைக் குறித்த உயிரெல்லாம்' (குறள். 1013) எனவருதல் காண்க. மாநகர் என்று பாடங் கொண்டு மாநகரங்களில் வாழும் உலகம் காப்போர் என்றுங் கூறுவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The guardians of heaven, the guardians of earth, and the guardians
- of the world where the great Nāgas live will be busy guarding their own heads; who then
- is able to guard your flesh? If you save my life,
- I will protect you; otherwise, there is that Irāvaṇaṉ!" she said.
What the poem says
Cūrppaṇakai's last offer mixes a threat with a bargain. Everyone who rules in heaven, on earth or in the serpent underworld is subject to Irāvaṇaṉ and will be too busy saving their own heads to help the brothers. Only she can protect them.
If they "save her life", that is, give in to her desire, she will shield them from her brother's anger. If not, Irāvaṇaṉ will come for them.