கம்பராமாயணம் 2948 · ஆரணிய 5.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெப்பு அழியா வெகுளி நெடுவேல் அரக்கர் - கொதிப்பு நீங்காத சினமுடைய நீண்ட வேலை ஏந்திய இராக்கதர்கள்; ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் - (எனக்கு நீங்கள் செய்த) இக்கொடுமையை அறிந்து சினந்து பார்த்தாரானால்; அப்பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் - பழிவாங்கும் அச் செயலால் உலகங்கள் எல்லாம் உம் கொடிய செயல் காரணமாக அழிந்து போனவை ஆகும்; அறத்தை நோக்கி - தருமத்தை எண்ணி; உயர் குலத்துத் தோன்றினோர் ஒப்பழியச் செய்கிலார் - மேலான குலத்தில் பிறந்தோர் உலகம் ஏற்கும் முறை கெடும் படியான செயலைச் செய்ய மாட்டார்கள்; (ஆதலால்) உணர்ந்து நோக்கி இப்பழியைத் துடைத்து உதவி என்னொடும் இனிது இருத்திர் - இந்த பழிபடும் செயலை நீக்கி அருள் செய்து என்னுடன் சேர்ந்து நன்கு வாழ்வீர்; என்று இறைஞ்சி நின்றாள் - என வணங்கி நின்றாள் சூர்ப்பணகை. வெப்பு - கொடுமையுமாம். 'என் பொருட்டு உங்களுக்குக் கருணை உண்டாகா விட்டாலும் உங்கள் செயலால் சினந்த அரக்கர் இவ்வுலகங்களை அழிப்பது உறுதி. அதனை எண்ணி இரக்கம் பூண்டு என்னோடு வாழ்வீர் என வணங்கிய நிலையில் சூர்ப்பணகை கூறும் மொழிகளில் உயிரும் உலகமும் அழிவதைச் சுட்டியும் அறம் காக்கும் கடமையை நினைவூட்டியும் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தன்னலமே மேலோங்கித் தெரிகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If the rākṣasas with long spears and unquenched burning rage learn of this and look on in fury,
- through that vengeance all the worlds will be destroyed on your account; mindful of dharma,
- those born of a high line do not do what ruins the world's order; consider well,
- wipe away this disgrace, help me, and live happily with me," she said, and stood bowing.
What the poem says
Cūrppaṇakai switches from flattery to threat. When the rākṣasas hear what was done to her, she warns, their fury will destroy every world, and the blame will be the brothers'.
Men of noble birth, she reminds Irāmaṉ, do not wreck the order of the world. He can undo the wrong by living with her. She bows as she speaks, but behind the talk of dharma and the fate of all beings is only her own desire.