கம்பராமாயணம் 295 · பால 5.127

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சவுளமொடு உபநயனமும் முறை தருகுற்று,
இ அளவது என ஒரு கரை பிறிது இல வாய்,
உவள் அரு மறையின் ஒடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.

பொருள் · Meaning in Tamil

சவுள மொடு உப நயம் - சவுளம், உபநயனம் முதலாகிய சடங்குகளை; விதிமுறை தருகுற்று - விதிப்படி செய்து; இ அளவது என - இந்த அளவுடையது எனக் கூறும்படியான; ஒருகரை பிறிது இலவா - ஒரு எல்லை வேறு எனச் சொல்ல இயலாதபடி; உவள் அரு மறையின் ஒடு - தூய்மையான வேதங்களுடன்; ஒழிவு அறு கலையும் - நீங்காத கலைகள் பலவற்றையும்; தவள் மதிபுனை அரன்நிகர் முனிதரவே - சந்திரனைத் தலையில் அணிந்துள்ள சிவபெருமானுக்கு ஒப்பான வசிட்ட முனிவன் கற்றுத்தர.

சவுளம்: குடுமிக் கல்யாணம் என்பர் (தலை முடி திருத்துதல்). உபநயம் - உபநயனம். பூணூல் அணிவித்தல் (துணைக்கண் என்பர்). ஞானக் கண் பெறுதற்குரிய சடங்கு என்பர். தருகுற்று: தரப்பெற்று (செய்து). இவ்வளவு: இவ்வளவு (இடைக்குறை). கரை: எல்லை (வேதத்துக்கு எல்லை இல்லை என்பது குறிப்பு). இலவா: (இல+ஆ) இல்லது ஆக. கலைகள் யாவும் மறைப் பொருளையே விளக்குவதாதலின் “மறையினொடு ஒழிவறு கலை” என்றார். அரன்: அடியார்களின் பாவத்தைப் போக்குபவன். சவுளம் மூன்றாம் ஆண்டிலும் உபநயனம் பத்தாமாண்டிலும் செய்யப்படுவதென்பர். தவள்: என்பதன் திரிபு.

சவுளம் முதலிய சடங்குகளை விதிப்படி நடத்தியபின் வசிட்ட முனிவன் வேதம் மற்றும் கலைகள் பலவற்றையும் அரசகுமாரர்களுக்கு கற்பித்தான் என்பது கருத்து. முனிவனுக்குச் சிவன் உவமை - முற்றும் உணர்தலாலும் நால்வர்க்கு அறம் கூறியதாலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the tonsure and the thread ceremony had been performed by rule,
  2. then, so that no one could say 'it reaches only this far', with no other shore,
  3. the pure, rare Vedas, together with every art without omission,
  4. the sage equal to Haraṉ who wears the white moon taught them.

What the poem says

The princes undergo the rites of childhood: the cavuḷam, the first cutting of the hair, usually in the third year, and the upanayanam, the investiture with the sacred thread, said to give the 'eye of wisdom'.

Vacittaṉ then teaches them the boundless Vedas and all the arts. He is compared to Śiva (Haraṉ), who wears the crescent moon, because both are all-knowing teachers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cavuḷamoṭu upanayam vitimuṟai tarukuṟṟu,
ivaḷavatu eṉa oru karai piṟitu ilavā,
uvaḷ aru maṟaiyiṉoṭu oḻivu aṟu kalaiyum,
tavaḷ mati puṉai araṉ nikar muṉi taravē.