கம்பராமாயணம் 296 · பால 5.128

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யானையும் இரதமும் இவுளியும் முதல் ஆ
ஏனைய பிறவும் அவ் இயல்பினின் அடையுற்று
ஊன் உறு படைபல சிலையொடு பயிலா
வானவர் தனி முதல் கிளையொடும் வளர.

பொருள் · Meaning in Tamil

யானையும் இரதமும் இவுளியும் முதலா - யானை, தேர், குதிரை ஆகியவைகளைச் செலுத்துதல் முதலான; ஏனைய பிறவும் அவ்வியல்பினில் - மற்றும் அரசகுமாரர்களுக்குரிய வாகனப் பயிற்சிகளையும் அந்தந்த முறையிலேயே; அடைவு உற்று - அடையப் பெற்று; ஊன் உறுபடை பல சிலையொடு பயிலா - பகைவரின் உடல்தசை அடையப் பெற்ற படைக்கலங்களை வில்வித்தையோடு பயின்று; வானவர் தனிமுதல் - தேவர்களின் ஒப்பற்ற தலைவனான ராமபிரான்; கிளையொடு வளர - தனது தம்பிமார்களுடனே வளர்ந்துவரும் நாளிலே.

யானை முதலியவை இவைகளில் ஏறிச் செலுத்துதலைக் குறிப்பது. யானையேற்றம், தேரேற்றம் முதலியவை அரசகுமாரர்களுக்கு உரியனவாம். “ஏனைய பிற” என்றது இவையல்லாத ஒட்டகம் முதலியவைகளில் ஏறிச் செல்லுதலைக் குறிக்கும். ஊனுறு படை: பகைவனின் ஊனைப் பொருந்திய படையாம். கிளை: உவமையாகு பெயராய் உறவினரைக் குறிப்பது. இங்குத் தம்பியரை உணர்த்தி நின்றது. பயிலா: பயின்று. முதலா: முதலாக. யானை முதலான ஊர்திகளைச் செலுத்துதல் - வில் முதலான பல்வேறு படைக்கல வித்தை பயில்தல் முதலியவைகளை ராமபிரான் தம்பியருடன் பயின்று வந்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Elephants, chariots and horses first of all,
  2. and the other mounts too, each in its proper way, they mastered;
  3. practising with the bow the many weapons that strike into flesh,
  4. the unique First Lord of the gods grew up with his kin.

What the poem says

The princes are trained in the skills of their class: riding elephants, horses and chariots and other mounts, and using every kind of weapon, above all the bow. Irāmaṉ, the supreme lord of the gods, grows up alongside his brothers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉaiyum iratamum ivuḷiyum mutalā
ēṉaiya piṟavum av iyalpiṉil aṭaivuṟṟu
ūṉ uṟu paṭai pala cilaiyoṭu payilā
vāṉavar taṉimutal kiḷaiyoṭu vaḷara.