கம்பராமாயணம் 297 · பால 5.129

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
திருவும், அ நகர் உறை செனமும், 'நம் இடரோடு
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம், முறை' என உறுவார்.

பொருள் · Meaning in Tamil

அருமறை முனிவரும் அமரரும் - அரிய மறைகளில் வல்ல முனிவர்களும் தேவர்களும்; அவனித் திருவும் அந்நகர் உறை செனமும் - நிலமகளும், அந்த நகரத்தில் வாழுகின்ற பொதுமக்களும்; இவர்களின் - இந்த அரசிளங் குமரரால்; நம் இடரொடு இரு வினைதுணிதரும் - நமது துன்பங்களும் அதற்குக் காரணமான இரு வினைகளும் துணிக்கப்படும்; இவண் நின்று - இவர்கள் இருக்கும் இந்த இடத்திலிருந்து; ஒருபொழுது அகல்கிலம் உறை - சிறிதுபொழுதும் அகலவே மாட்டோம்; என உறுவார் - என, அப்பிள்ளைகளுடனே தங்கியிருப்பார்.

அமரர்: தேவர் (அழிவில்லாதவர் என்பது பொருள்). அவனி: நிலம். முனிவரும், தேவரும், நிலமகளும், நகரமக்களும் “இவர்களால் நமது இடர் தீரும்; வினையும் நீங்கும்; ஆதலால் இங்கிருந்து ஒருபோதும் அகலோம்; இவருடனே உறைவோம்” என்று உடன் உறைவாராயினர் என்பது கருத்து. துணிதரும்: துணியும். இருவினை: நல்வினையும் தீவினையுமாம். இவர்களின்: இவர்களால். அகல்கிலம்: தன்மைப் பன்மை வினைமுற்று. உறை அகல்கிலம்: உறைவதிலிருந்து (உடனிருப்பது). அகலமாட்டோம். முனிவர் முதலினோர் குமரரை விரும்புதல் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sages of the rare Vedas, the immortals, the goddess of the earth,
  2. and the people who lived in that city, saying 'From these, by whom our distress
  3. and both kinds of karma will be cut away, we will not part
  4. for a single moment; we will stay,' remained close to them.

What the poem says

Sages, gods, the Earth and the townspeople all feel that the princes will cut away their suffering and the karma, good and bad, that causes it. So they cannot bear to leave them even for a moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aru maṟai muṉivarum, amararum, avaṉit
tiruvum, an nakar uṟai ceṉamum, 'nam iṭaroṭu
iru viṉai tuṇitarum ivarkaḷiṉ ivaṇniṉṟu
oru poḻutu akalkilam, uṟai' eṉa uṟuvār.