கம்பராமாயணம் 298 · பால 5.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயனும் இளவலும் - ராம பிரானும், தம்பியாகிய இலக்குவனும்; அணிநில மகள்தன் - அழகிய நிலமகளுக்குரிய; செய்தவம் உடைமைகள் தெரிதர - செய்த தவப்பயனாய்ப் பெற்றுள்ள செல்வங்களைத் தெரிந்து கொள்ள; நதியும் மைதவழ் பொழில்களும் வாவியும் மருவி - ஆறுகளையும், மேகங்கள் தவழும் சோலைகளையும், பொய்கைகளையும் அடைந்து; நெய்குழல் உறும் இழை என - நெசவுக் குழலும், அதனோடு பொருந்திய நூலிழையும் போன்று; நிலை திரிவார் - நிலையிலே திரிவார்கள்.
நிலை திரிதல்: ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லுதலுமாம். நிலமகள் செய்தவத்தையும், அதனால் அடைந்த பொருட் பேற்றையும் தெரிய விரும்புவார் போல, ஆறு, சோலை, குளம் ஆகிய எல்லா இடங்களிலும் ராமனும் இலக்குவனும் சேர்ந்து திரிந்தனர் என்பது கருத்து. இராமனும் இலக்குவனும் இணைபிரியாமை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord and his younger brother, to see clearly
- the wealth that the lovely Earth had won by her penance,
- went among rivers, groves where dark clouds crawl, and pools,
- roaming together like the weaver's shuttle and its thread.
What the poem says
Irāmaṉ and Ilakkuvaṉ wander together through rivers, groves and pools, as if to see all the riches the Earth has earned by her penance.
They are as inseparable as a shuttle and the thread that runs through it.