கம்பராமாயணம் 299 · பால 5.131

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது - பரதனும், சத்துருக்கனும் ஒரு நொடிப்பொழுதேனும் பிரியாது; இரதமும் இவுளியும் இவரினும் - தேரிலும், குதிரையின் மீதும் ஏறிச் சவாரி செய்யும் போதும்; மறை நூல் உரைதரு பொழுதினும் - வேதம் முதலிய நூல்களை ஓதுகின்ற காலத்தினும்; ஒழிகிலர் - பிரியாதவர்களாகி; எனை ஆள் வரதனும் இளவலும் என - என்னை ஆட்கொண்டருளிய ராமபிரானையும், இலக்குவனையும் போல; மருவினர் - சேர்ந்திருந்தனர்.

நொடி: கை நொடிப் பொழுது. இதனை மாத்திரை என்பர். தொழிலாகு பெயராய்க் கால அளவை உணர்த்தி நின்றது. இவர்தல்: ஏறுதல். உரைதருதல்: ஓதுதல். ஒழிகிலர்: முற்றெச்சம். ஆள்வரதன்: வினைத்தொகை. வரதன்: வரம் தரவல்லன். இவுளி: குதிரை. பகிராது: பிரியாது.

பரதனும், சத்துருக்கனும் தேரேறிச் சென்றாலும், குதிரைச் சவாரி செய்தாலும் வேதம் முதலான கலைகளை ஓதினாலும் ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவராகி இராமனையும், இலக்குவனையும் போலச் சேர்ந்திருந்தனர் என்பது கருத்து. பரத சத்துருக்கனரின் ஒட்டுறவு கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Paratan and the younger one, never parting for a moment,
  2. whether mounted on chariot or horse, or while
  3. reciting the Veda scriptures, never apart,
  4. kept together like the boon-giver who rules me and his younger brother.

What the poem says

Paratan and Catturukkaṉ are just as inseparable a pair, in riding and in study, as Irāmaṉ and Ilakkuvaṉ.

The poet calls Irāmaṉ 'the boon-giver who rules me', a personal confession of devotion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parataṉum iḷavalum orunoṭi pakirātu
iratamum ivuḷiyum ivariṉum, maṟainūl
uraitaru poḻutiṉum oḻikilar, eṉai āḷ
varataṉum iḷavalum eṉa maruviṉarē.