கம்பராமாயணம் 300 · பால 5.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரனும் இளைஞரும் - மாவீரனாகிய ராமபிரானும், தம்பியரும்; வெறிபொழில்களின் வாய் - மணம் செறிந்த சோலைகளிடத்தே (சென்று); ஈரமொடு உரைதரு - அன்போடு (வந்தவரிடம்) உரையாடுகின்ற; முனிவரர் இடைபோய் - முனிவர்களிடம் (காலையில்) சென்று; சோர் பொழுது அணிநகர் துறுகுவர் - மாலைப் பொழுதிலே அழகிய அயோத்தி நகரை அடைவர்; எதிர்வார் - போகும் போதும் வரும் போதும் எதிர்ப்படும் நாட்டு மக்கள் எல்லோரும்; களியால் - (இராம பிரானையும் தம்பியரையும் கண்ட) களிப்பில்; கார் வர அலர் பயிர் பொருவுவர் - மழை வர மகிழும் பயிர்களை ஒத்துக் காணப்படுவர்.
கார்: மேகம் (மழையைக் குறித்தது). வெறிபொழில்: மணம் கமழும் சோலை. ஈரமொடு உரைதரு: அன்போடு பேசுகின்ற. ஈரம்: அன்பு. முனிவரர்: (வசிட்டனை ஒத்த முனிவர்கள்). “சோர் பொழுது துறுகுவர்” என்றதால் காலையில் சென்று என உரைகூறப்பட்டது. சோர்பொழுது: வெயில் சோரும் பொழுது. துறுகுதல்: சேர்தல். எதிர்வார்: எதிரில் வருபவர்கள். மழைமேகம் கண்டு பயிர்கள் மகிழ்வது இயல்பு. மேகவண்ணனான ராமனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர் என்கிறார் என்பது எத்துணை பொருந்தும். முனிவர்கள் தம்மைக் காணவருவோரிடமும், பாடம் கேட்கும் மாணவரிடமும் அன்போடு உரையாடும் பண்பினர் என்பதால் “ஈரமொடுரை தரு” என்றார். பொருவுதல்: ஒப்பாதல்.
அரசிளங்குமரர் நால்வரும் நாள்தோறும் காலையிலே அந்நகருக்குப் புறத்தே உள்ள சோலைகளில் வாழும் முனிவர்களிடம் சென்று - உரையாடி - நுண்ணிய நூற்பொருள் கேட்டு மாலையில் நகருக்குத் திரும்புவர். எதிர்ப்படும் மக்களெல்லாம் மழைவரக் கண்டு தழைதரு பயிர் போல இவர்களைக் கண்டு மகிழ்வர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hero and the younger ones went to the sages who dwell
- in fragrant groves and speak with kindness,
- and at the waning of the day returned to the lovely city; those who met them,
- in their joy, were like crops that open when the rain cloud comes.
What the poem says
Each morning the princes go out to the sages in the groves outside the city to talk with them and learn, and return in the evening.
The people who meet them on the road rejoice like crops when the rain cloud arrives. The image is apt because Irāmaṉ himself is dark like a rain cloud.