கம்பராமாயணம் 301 · பால 5.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏழையர் அனைவரும் - அயோத்தி நகரத்தில் வாழும் பெண்களும்; இவர் தட முலைதோய் கேழ்கிளர் மதுகையர் - அப்பெண்களின் தனங்களைத் தழுவி வாழும் வலிமை மிக்கவரான அவர்களது கணவர்களும்; கிளைகளும் - மற்றும் அங்கு வாழும் அவர்களது உறவினரும்; இளையார் வாழிய என - இச்சிறுவர் நீடுழி வாழ்வார் ஆக என்று கூறி; கவுசலை தயரதன் எனவே - கோசலையையும், தயரதனையும் ஒப்ப; அவர் மனனுறு கடவுள் தாழ்குவர் - தத்தம் மனம் பொருந்திய தெய்வங்களை வணங்கித் துதிப்பர்.
ஏழையர்: பெண்கள் (இவ்வாறு கூறுவது கவி மரபென்பர்). தோய்தல்: தழுவுதல். கேழ்: உவமை. மதுகை: வலிமை. இளையார்: இளையவர். கேழ்கிளர் என்பதால் பெண்களைத் தழுவும் உரிமையுடைய ஆடவர்களான கணவன்மார்களைக் குறித்தது. வாழிய: வியங்கோள் வினைமுற்று. தயரதனது பட்டத்தரசியர் மூவருள்ளும் முதல் தேவி என்பதால் கோசலையைக் கூறினார் எனலாம். “மறுவிலன்பினின் வேற்றுமை மாற்றினாள்” என்றபடி மக்கள் நால்வரையும் சமமாகக் கருதியவள் என்பதும் இதனால் விளங்கும். மனன்உறு கடவுள்: தத்தம் குல தெய்வமுமாம். அந்த நகரத்தில் வாழும் ஆண்களும், பெண்களுமான அத்தனை பேரும் அரசகுமாரர்களின் நல்வாழ்வுக்குத் தத்தம் மனம் பொருந்திய தெய்வங்களைத் தொழுது வேண்டினர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the women, and their strong husbands whose
- bright splendour rests on their wide breasts, and their kin,
- saying 'Long live these young ones!', bowed to the gods of their hearts
- as though they were Kaucalai and Tacarataṉ.
What the poem says
All the townspeople pray to their own family gods for the princes' welfare, as anxiously as though they were the boys' own parents, Kaucalai, that is Kōcalai, and Tacarataṉ.
Kōcalai alone is named, the commentary says, because she is the chief queen and loved all four sons equally.