கம்பராமாயணம் 302 · பால 5.134

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறையும் தடவுதல் அறிவரு - வேதமும் தேடி அறிதற்கு அரிய; தனி முதல் அவனும் - ஒப்பற்ற முதல்வனாகிய ராம பிரானும்; புடைவரும் இளவலும் - அவனுக்குப் பக்கம் வரும் இலக்குவனும்; உடன்வரு செயல் - சேர்ந்து வருகின்ற செயலானது; கடல்தரு முகில் - கடல் தந்த கரிய மேகமானது; ஒளிர் கமலம் அது அலரா - விளங்கும் தாமரை மலர்கள் அலர; வடவரையுடன் வரு செயல் என - மேரு மலையுடன் வருவது போன்றது என; நிகர் புகல்வார் - (இந்த இருவரையும் பார்த்தவர்கள்) ஒப்பிட்டுக் கூறுவார்கள்.

கடல் தரு முகில்: கடல் தந்த கார்மேகம். அலரா: மலர்ந்து. வடவரை: வடக்கிலுள்ள மலை (மேருமலை). தடவுதல்: தேடுதல். தனிமுதல்: ஆதிபகவன். அவன்: உலகறி சுட்டாக நின்று பரமனை உணர்த்தும். புடை: பக்கம்.

'கமலம் பூத்த கரு முகில்' இராமனுக்கு உவமை. “வடவரை” இலக்குவனுக்கு உவமை. 'புகல்வார்' என்ற பயனிலைக்கேற்ப “கண்டோர்” எழுவாயாகக் கொள்ளப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As though a cloud born of the sea, with shining lotuses in bloom,
  2. were coming with the northern mountain:' so the unique First One
  3. whom even the Vedas cannot find by searching,
  4. and the younger brother at his side, were described by those who saw them.

What the poem says

Seeing Irāmaṉ walk with Ilakkuvaṉ, people compare them to a dark rain cloud, Irāmaṉ, with lotuses blooming on it for his eyes, face and hands, travelling alongside Mount Mēru, the golden northern mountain, which stands for the fair Ilakkuvaṉ.

The image is an impossible one, a cloud covered in lotuses, chosen because nothing real is good enough.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1”kaṭaltaru mukil oḷir kamalamatu alarā
vaṭa varaiyuṭaṉ varu ceyal eṉa, maṟaiyum
taṭavutal aṟivu aru taṉi mutalavaṉum
puṭai varum iḷavalum eṉa nikar pukalvār.