கம்பராமாயணம் 2955 · ஆரணிய 5.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் - பெரிய கொண்டாட்டம் மிகுந்த அயோத்தி நகரத்து நீங்கள் மீண்டு செல்லும் நாளில்; வேண்டும் உருப்பிடிப்பேன் - நீங்கள் வேண்டும் வடிவம் கொள்வேன்; அன்றேல் - அல்லாவிடில்; இளையவன் தான் அருங்கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் - உன் தம்பி நீங்கற்கரிய கோபம் கொண்டவனாயிருந்தான் ஆயினும்; அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் - அறுபட்ட மூக்கு முழுதுமில்லாதவளுடனே வாழ்வேனோ என்று கூறுவானாயினும்; இறைவ நீ - தலைவனே நீ; மருங்கு ஒன்றும் இலாதவளோடும் அன்றோ நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய் - இடை சிறிதும் இல்லாதவளோடு அன்றோ நீண்ட காலம் வாழ்ந்து வந்தாய் என விடை கூறுவாய்.
குலா - மகிழ்ச்சியும் ஆம் உருப்பிடிப்பேன் - வேண்டும் உருவத்தை விரும்பியவாறு அமைத்து கொள்வேன் என்றாள். இதற்கு இவளுடைய மாய ஆற்றல் பயன்படும் என்பதாம். அருங்கலாம் - அரிய கலாய்ப்பு என்பது பழைய உரை. இனி அரிய காரியம் பல சாதித்தோம் எனவுமாம். பெண்டிர்க்கு இடை நுணுகி இருத்தல் அழகு. அதனை மருங்கில்லாதவள் என உயர்வு நவிற்சியால் கூறுவாள். மூக்கின்மைக்கு இடையின்மை சாலும் என விடை கூறுமாறு சூர்ப்பணகை வேண்டுகிறாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the day you go back to your great festive city, I will take whatever form you wish; or else,
- if your younger brother, though he cut it in bitter anger,
- says, "Shall I live with this woman whose cut nose is not whole?", then, lord,
- you will answer, "Have you not lived a long time with one who has no waist at all?"
What the poem says
Cūrppaṇakai promises that when they return to Ayōttī she will take any shape they like, using her magic powers. And if Ilakkuvaṉ objects that he cannot live with a woman whose nose has been cut off, Irāmaṉ should answer him with a joke.
Has Irāmaṉ himself not lived for years with a woman who has no waist? A waist so slender it seems not to exist was the classic mark of beauty, and Cūrppaṇakai turns this poetic exaggeration into an argument: a missing nose is no worse than a missing waist.