கம்பராமாயணம் 2956 · ஆரணிய 5.142
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றவள்மேல் - என்று கூறிய சூர்ப்பணகையின் மேல்; இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக் கணியா - இலக்குவன் விளங்குகின்ற இலை வடிவிலுள்ள வேலைக் கடைக் கண்ணால் பார்த்து; இவளை ஈண்டு கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் - இந்த அரக்கியை இவ்விடத்தில் கொன்று ஒழித்திடவில்லை எனின் மிகவும் வருத்துவாள்; அருள் என் கொல் கோவே என்ன - (உன்) கட்டளை எதுவோ தலைவா! என்று கேட்க; நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற - நற்செயல் நீ கூறியதே ஆகும் அல்லவா அவ்வாறு அவள் போகாவிடில் அவ்வாறே செய்க என்று தலைவனாம் இராமன் சொல்ல; எனக்கு ஒன்றும் இவர் இரங்கார் நிற்கின் உயிர் இழப்பென் என அரக்கி உன்னா - என்னிடம் ஒரு வகையிலும் இவர்கள் அருள் செய்ய மாட்டார் இனி இங்கு நின்றால் என் உயிரை இழப்பேன் எனச் சூர்ப்பணகை எண்ணி;
கடைக்கணியா - போர் செய்யும் போது வீரர்தம் போர்க் கருவியைப் பார்த்துக் கூறுதல், அது அவர்கள் அப்போர்க் கருவி கொண்டு செய்யும் போர்த் தொழிலையும் சுட்டும். அருள் என் கொல் - இடும் ஆணை எதுவோ? என எதிர் நோக்கிக் கேட்டது. இனி, இவ்வரக்கியிடம் இதுவரை அருள் காட்டுவதன் காரணம் எதுவோ என்றலுமாம். இருவர் உரையாடலும் அவர்தம் நிலையைக் காட்டும் நாடகத் திறம் புலப்பட அமைந்துளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she said this, the younger one glanced from the corner of his eye at his gleaming leaf-bladed spear: "Her, here,
- unless we kill and be rid of her, she will torment us long; what is your command, my king?"
- "Good, that is right, is it not? If she will not go, so be it," said the lord;
- "They will show me no pity at all; if I stay I will lose my life," the rākṣasī thought.
What the poem says
Ilakkuvaṉ has had enough. Glancing at his spear, a warrior's way of signalling he is ready to use it, he tells Irāmaṉ that unless they kill her she will plague them endlessly, and asks for his order.
Irāmaṉ agrees: if she will not leave, let it be done. Hearing this, Cūrppaṇakai realises they will never take pity on her and that staying means death. The verse continues into the next.