கம்பராமாயணம் 2970 · ஆரணிய 6.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நன்று சொல்லினிர் - நன்றாகச் சொன்னீர்கள்; நான் இச்சிறார்கள் மேல் - இந்த மானிடச் சிறுவர்களையெதிர்த்து; சென்று போர் செயின் - போய்ப் போர் புரிந்தால்; தேவர் சிரிப்பர் - தேவர்கள் நம்மை இகழ்ந்து சிரிப்பார்கள்; கொன்று சோரி குடித்து - (ஆதலால்) நீங்கள் சென்று அவர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைப் பருகி; அவர் கொள்கையை வென்று - அவர்கள் கொண்ட கோட்பாட்டைச் சிதைத்து வெற்றி கொண்டு; மெல்லியலோடு மீளுதிர் - அவர்களிடமுள்ள மென்மைத் தன்மையுடைய பெண்ணோடு திரும்பி வாருங்கள்; என்றான் - என்று அந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
நன்று சொல்லினிர் - தக்கதையே சொன்னீர்கள் என்பது. அவர்கொள்கை : அரக்கர்களைக் கொன்று அறத்தைக் காப்பது என்ற அவர்களின் கோட்பாடு. நிலவுலகில் நிகழும் போரை வானத்திலிருந்து காணுதல் தேவர்தம் இயல்பு. ஆல் : ஈற்றசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Well said! If I go and fight these boys myself,
- the gods will laugh;
- kill them, drink their blood, defeat their resolve,
- and come back with the gentle woman," he said.
What the poem says
Karaṉ agrees with his commanders. If he fought two boys himself, the gods who watch earthly battles from the sky would laugh at him.
He orders them to kill the brothers, drink their blood, crush their vow to protect dharma by destroying the rākṣasas, and bring the woman back with them.