கம்பராமாயணம் 2969 · ஆரணிய 6.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெம்பு கோபக் கனலர் - கொதிக்கின்ற கோபத் தீயையுடைய அந்த அரக்கர்கள்; (கரனை நோக்கி) நம்பி - சிறந்த தலைவனே! எம் அடிமைத் தொழில் நன்று - எங்களது அடிமைத் தொழில் நன்றாக இருந்தது; எனா - என்று தம்மை இகழ்ந்தவர்களாய்; இன்று உம்பர்மேல் - இப்பொழுது தேவர்கள் மேல்; உருத்தனை போதியோ - கோபித்துப் போர் செய்யப் போகிறாயோ (அப்படி இல்லையே இவ்வாறு நீ மனிதரோடு போருக்குச் சென்றால்); இனி இம்பர்மேல் - இனி இந்தவுலகத்தில், யாம் உளெமோ - நாங்கள் உயிரோடு வாழ்பவர்களாவேமோ?; என்றார் விலக்கினார் - என்று சொல்லி (கரனைப் போருக்குச் செல்லாதபடி) தடுத்தார்கள்.
'எம் அடிமைத் தொழில் நன்று' - நாங்கள் உனக்கு அடியவர்களாய் நீ இட்ட கட்டளையை ஏற்றுச் செய்வதற்குப் பணியாளராகக் காத்திருக்க, நீ எங்களுக்கு எந்தவிதக் கட்டளையுமிடாமல் நேரே போருக்குச் சென்றால் எங்கள் அடிமைத் திறம் என்ன பயனைத் தரும்? என்பது; இகழ்ச்சிக் குறிப்பு. நம்பி - அண்மை விளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Burning with seething anger, they held him back:
- "Lord! A fine thing, our service as your slaves!
- Are you going out today in wrath against the gods above?
- If you go yourself against these, are we alive any more on this earth?" they said.
What the poem says
The fourteen commanders stop Karaṉ from going himself. They mock their own position: what fine servants they must be, if their master has to go out in person.
If he were marching against the gods it would be another matter, they say, but if he must fight mere men himself, they might as well not be alive. Their speech is a show of loyalty and wounded pride.