கம்பராமாயணம் 2968 · ஆரணிய 6.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அந்த அரக்கர்கள்) சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் கால பாசம் கதை பொரும் கையினார் - சூலம் முதல் கதை வரையுள்ள போர்ப் படைகளால் போர் செய்யும் கைகளையுடையவர்கள்; வேலை ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்து உயிர்கள் யாவும், வெருவுறும் ஆர்ப்பினார் - அஞ்சத்தக்க ஆரவாரம் உடையவர்கள்; ஆலகாலம் திரண்டன்ன - ஆலகாலம் என்ற நஞ்சு உருவெடுத்து வந்தாற்போன்ற; ஆக்கையார் - உடலையுடையவர்கள்.
கையினார் ஆர்ப்பினார் ஆக்கையார் 'ஏழினோடு ஏழனார் என்ற அடைமொழியோடு (2884) கூட்டுக. சூலம் - முத்தலைவேல்; மழு - கோடரி; தோமரம் - இரும்புலக்கை; காலபாசம் - கயிற்றாலான ஒரு போர்க்கருவி; கதை - தண்டாயுதம் ஆலகாலம் - கரிய நிறத்திற்கும் கொடுஞ்செயலுக்கு உவமை. ஞாலம் - ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their hands fought with tridents, swords, battle-axes, iron clubs, discuses,
- the noose of death and maces;
- their roaring made the sea-girt world tremble;
- their bodies were like the Ālakālam poison gathered into form.
What the poem says
The poet describes the fourteen commanders who have volunteered. They wield tridents, swords, axes, iron clubs, discuses, nooses and maces.
Their war cries terrify every creature in the sea-bound world, and their bodies look like the deadly Ālakālam poison, which rose from the churned ocean, taken shape: black in colour and deadly in action.