கம்பராமாயணம் 2967 · ஆரணிய 6.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இவ்வாறு கூறிய கரன்) தேர் வருக எனும் மாத்திரை - எனது தேர் வரட்டும் என்று சொல்லிய அளவில்; மாடு உளோர் - அவன் பக்கத்தில் இருப்பவர்களும்; இருகை மால்வரை ஏழினோடு ஏழ் அனார் - இரண்டு கைகளையுடைய பெரிய பதினான்கு மலைகளை ஒத்தவர்களும்; ஒரு கையால் - ஒவ்வொருவரும் தத்தம் ஒரு கையினாலே; உலகு ஏந்தும் உரத்தினார் - உலகம் முழுவதையும் தாங்கி ஏந்தும் வலிமையுள்ளவர்களுமான அவனுடைய படைத் தலைவர்கள் பதினால்வர்: இப்பணி - (கரனை நோக்கி) இப் பணியாகிய போர்த் தொழிலை; எம் வயின் தான் தருக - எங்களிடமே தந்தருளுக; என்றார் - என்று வேண்டினர்.
இரண்டு கைகளையுடைய பெருவலி படைத்த பதினால்வரான இவர்களின் வடிவம் உருவத்தாலும், வலிமையாலும் பெரிய மலை போல இருத்தலால் உவமானமாகிய மலைக்கு 'இருகை' என்ற அடைமொழி தந்தார் என்பது; இல்பொருளுவமை.
மாடு: பக்கம்; மாத்திரை: கண்ணிமைக்கும் அல்லது கை நொடிக்கும் கால அளவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The moment he said, "Bring my chariot!", those at his side,
- like fourteen great mountains with two arms each,
- with strength to hold up the world in one hand,
- said, "Give this task to us."
What the poem says
As soon as Karaṉ calls for his chariot, the fourteen commanders beside him step forward. Each is like a huge mountain that happens to have two arms, and each is strong enough to lift the world with one hand.
They ask him to leave this fight to them; the two men are not worth his own effort. The comparison to a mountain with arms is something that does not exist in nature, a figure Tamil poetics calls a comparison with an imaginary object.