கம்பராமாயணம் 2966 · ஆரணிய 6.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுந்து நின்று - (இவ்வாறு சொல்லி) எழுந்து நின்று; உலகு ஏழும் எரிந்து உக - எழுலகங்களும் எரிந்து பொடியாய்ச் சிதறும்படி; பொழிந்த கோபம் கனல் உக - (கண்கள்) சொரிந்த கோபத் தீ வெளியே சிந்த; பொங்குவான் - மனங் கொதிப்பவனான கரன்; மானிடர் கழிந்து போயினர் என்னுங்கால் - (இத் தீய செயல் செய்த) மனிதர்கள் (என்னால்) அழிந்து விட்டார்கள் என்னும் மாத்திரத்தில்; இவ் அரும் பழி - (நமக்கு உண்டான) இந்த அரிய பழி; அழிந்ததோ - தீர்ந்ததாக ஆகுமோ (ஆகாது); என்னும் - என்று சொன்னான்.
தான் இப்பொழுது இராமலக்குவர்களை எதிர்த்து அழிப்பது உறுதியென்பதும், அப்படி அவர்களை அழித்தாலும் அரக்கர் சமூகத்திற்கு அந்த மானிடரால் உண்டான பழி அழியாது என்பது கரன் கொண்ட கருத்தாகும்.
உலகேழ் - மேலேழும் கீழேழுமாகிய பதினான்கு உலகங்கள். எழுந்து நின்று பொங்குவான் என இயையும். ஆல் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He rose and stood, seething, as the fire of anger poured out
- fit to burn all seven worlds and scatter them;
- "Even when it can be said 'Those men are dead and gone,'
- will this grave disgrace be wiped out?" he said.
What the poem says
Karaṉ stands up seething, his eyes pouring out fire fierce enough to burn the seven worlds to ash. He is sure he will kill the two men.
Yet he says that even their death will not erase the shame mere humans have brought on the rākṣasa race by mutilating his sister.