கம்பராமாயணம் 2965 · ஆரணிய 6.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எதிர் கண்டவர் நாட்டம் தீய - (தன்னை எதிரில்) பார்த்தவர்களின் கண்கள் கருகிப் போய்விடும்படி; உலகை நடுக்குவான் - உலகத்து உயிர்களை நடுங்கச் செய்பவனான கரன்; உரை கேட்டனன் - சூர்ப்பணகை சொன்ன வார்த்தைகளைக் கேட்டு; தோட்ட நுங்கின் - தோண்டியெடுக்கப்பட்ட பனை நுங்கைப் போல; தொளை உறு - துளை பொருந்திய, மூக்கினை - அவளது மூக்கை; கண்ணினால் கண்டனன் - (தன்) கண்களால் பார்த்து; காட்டு எனா எழுந்தான் - (உனக்கு இக்கெடுதி செய்தவரை எனக்குக்) காட்டு என்று சொல்லிக் கிளம்பினான்.
சூர்ப்பணகையின் மூக்கு அறுபட்டுத் துவாரங்கள் மட்டும் விளங்கிய முகத்தின் தோற்றம், நுங்கு தோண்டி எடுக்கப்பட்ட பின் விளங்கும் பனங்காய் போன்றிருந்தது என்பது. நுங்கு மானிட உறுப்புக்கு ஒப்பு. (நாலடி. 44). பனங்காய் அந்த அரக்கியின் முகத்தின் வடிவத்திற்கும்; நிறத்திற்கும் மிக்க பொருத்தமான உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He heard her words; he saw with his own eyes
- her nose with holes like a palm fruit with its kernels scooped out;
- "Show me!" he cried and rose, he who shakes the world
- so that the eyes of those who face him are scorched.
What the poem says
Karaṉ, whose glare could burn the eyes of anyone who faced him and whose rage could make the world tremble, hears his sister's story and sees her ruined face.
With only two holes left where her nose was, her face looks like a dark palmyra fruit after its soft kernels have been scooped out, an image that fits both its shape and colour. He leaps up and demands that she show him the men who did it.