கம்பராமாயணம் 2976 · ஆரணிய 6.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கால வெந் தீ அன்ன - கொடிய ஊழிக் காலத்துத் தீயைப் போன்ற; காட்சியார் - தோற்றத்தையுடையவர்களாகிய அந்த அரக்கர்களின்; மழுவும் - மழுவென்னும் ஆயுதத்தையும்; வாளும் - வாள்களையும்; வயங்கு ஒளி - விளங்குகின்ற ஒளியுடைய; முச் சிகைக் கழுவும் - முத்தலைகளையுடைய சூலங்களையும்; எழுவின் நீள் தடக்கை எழுநான்கையும் - (இவ்வாறான படைக்கலங்களை ஏந்திய) - தூண்களைப் போன்று நீண்ட பெரிய கைகள் இருபத்தெட்டையும்; தழுவும் வாளிகளால் - குறி தவறாமல் தாக்கும் அம்புகளால்; தலம் சார்த்தினான் - துணித்துத் தரையில் வீழ்த்தினான்.
அப் பதினான்கு அரக்க வீரர்களின் கைகளையும் இராமன் தன் அம்புகளால் துண்டித்துத் தரையிலே தள்ளினான் என்பதாம். போரின் தொடக்கத்திலேயே பதினான்கு அரக்கர்களும் தம் படைகளுடன் கைகளை இழந்தனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The axes, the swords, the brightly gleaming three-pointed
- tridents of those who looked like the fierce fire at the end of time,
- and their long great arms like pillars, all twenty-eight of them,
- he brought to the ground with arrows that struck home.
What the poem says
In the first moments of the fight Irāmaṉ's arrows cut off all twenty-eight arms of the fourteen commanders, who looked like the fire that ends the world.
Arms, axes, swords and gleaming tridents all fall to the ground together.