கம்பராமாயணம் 2975 · ஆரணிய 6.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாமரைக் கண்ணன் - செந்தாமரை மலர் போன்ற அழகிய கண்களையுடைய இராமன்; வாங்கி - வில்லை எடுத்துக் கொண்டு; வாளொடு - வாளுடனே; வாளி பெய் புட்டிலும் - அம்புகளை வைத்துள்ள அம்பறாத் தூணியையும், தாங்கி - தரித்துக் கொண்டு; அச் சாலையை நீங்கி - அந்தப் பர்ணசாலையை விட்டு நீங்கி; இவ்வழி நேர்மின் அடா எனா - இந்த இடம் (போருக்கு) வாருங்களடா என்று (அரக்கரை நோக்கிக்) கூறி; வீங்கு தோளன் - (போர் கருதியதால்) பூரித்த தோள்களையுடையவனாய்; மலைதலை மேயினான் - போர் செய்யத் தொடங்கினான்.
இராமன் வாளை இடையிலும், அம்புப் புட்டிலைத் தோள்புறத்திலும் தாங்கினான் என்பது. உள்ளத்தைக் கவரும் அழகும் குளுமையும் நிறமும் உருவும் ஒத்தமையால் தாமரைமலர் இராமனின் கண்களுக்கு உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking it up, and bearing his sword and the quiver filled with arrows,
- the lotus-eyed one left that hut
- and said, "Come at me this way, you!";
- and with swelling shoulders he joined battle.
What the poem says
Irāmaṉ takes his bow, buckles on his sword and slings his quiver, then leaves the leaf hut and calls out to the rākṣasas to come and face him.
His shoulders swell with eagerness for the fight, and the battle begins.