கம்பராமாயணம் 2974 · ஆரணிய 6.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏத்து வாய்மை இராமன் - யாவரும் புகழ்ந்து கொண்டாடும் சத்தியத்தையுடைய இராமன்; இளவலை - தம்பியான இலக்குவனை (நோக்கி), தையலை(க) காத்தி என்று - தேவியாகிய சீதையை நீ பாதுகாத்துக் கொண்டிரு என்று கூறி; பூத்தது கற்பகம் அன்ன - பொலிவு பெற்ற கற்பக மரம் போன்ற; பொருவு இல் - வேறு ஒப்பில்லாத; தன் தடக் கையால் - தன்னுடைய பெரிய கையினால்; ஆத்த நாணின் - கட்டப்பட்ட நாண்கயிற்றையுடைய; அருவரை வாங்கினான் - அழித்தற்கரிய மலை போன்ற வில்லை எடுத்துக் கொண்டான்.
ஏத்து வாய்மை இராமன் - தண்டகாரணியத்தில் வசிக்கும் முனிவர்கள் அரக்கர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தன்னைச் சரணடைந்த பொழுது அவர்களுக்கு இராமன் அந்த அரக்கர்களையெல்லாம் வேரறுப்பதாக வாக்குறுதி தந்திருந்ததைப் பழுதுபடாதவாறு நிறைவேற்றத் தொடங்கினான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Irāmaṉ of praised truthfulness told his younger brother,
- "Guard the lady," and with his own peerless great hand,
- like a wishing tree in flower,
- took up the strung bow, an unconquerable mountain.
What the poem says
Irāmaṉ, famous for keeping his word, tells Ilakkuvaṉ to guard Cītai and picks up his strung bow, as massive as a mountain.
His generous hand is compared to the flowering karpakam, the heavenly wishing tree. The commentary notes that he is beginning to keep the promise he made to the sages of the Taṇṭaka forest, to rid them of the rākṣasas.